Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை: தமிழகத்தை மிஞ்ச ரெங்கசாமி மூவ்.. இது பக்கத்து வீட்டு பாசம் மட்டுமல்ல

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தமிழக அரசியலில் தற்போது "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.. இதேபேன்ற திட்டம் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் எதிரொலிக்க துவங்கி உள்ளது.. ஆனால் சில நடைமுறை சிக்கல்களும் அங்கு உள்ளன.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை பொறுத்தவரை, ஒரு கோடியே 31 லட்சம் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3000 ரூபாயுடன், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 20000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 5000 ரூபாய் வழங்கப்பட்டது வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

Puducherry Women Rights Fund

புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை

தமிழக அரசின் இந்த அதிரடி நிதியுதவி நடவடிக்கை, அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

நம்ம தமிழகத்தை போலவே புதுவையிலும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டிருந்தாலும், போதிய நிதி ஆதாரம் இல்லாதது அவருக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது..

கடந்த பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் 3000 ரூபாய் வழங்கப்பட்ட போதே, புதுவையில் 5000 ரூபாய் வழங்க முதல்வர் ரங்கசாமி விரும்பினார்.. இதற்கான கோப்புகள் தலைமை செயலகம் மூலமாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட போது, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை காட்டி ஆளுநர் மாளிகை அந்த கோப்புகளை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது..

ரங்கசாமி ப்ளான்

இதனால் அதிருப்தியடைந்த ரங்கசாமி மற்றும் மாநில பாஜக தலைவர்கள், ஆளுநரை நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க போராடினர்.. கடைசியில் மத்திய நிதியமைச்சருடன் ஆலோசித்த பிறகே, போகிப் பண்டிகை இரவில் மூவாயிரம் ரூபாய் வழங்க அனுமதி கிடைத்தது..

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை தங்குதடையின்றி வழங்கப்படுவதை பார்க்கும் போது, புதுவையில் உள்ள 3.69 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அதேபோன்று நிதி வழங்க முடியவில்லையே என்ற ஆதங்கம் முதல்வர் ரங்கசாமிக்கு எழுந்துள்ளதாம்..

இது குறித்து அவர் தனது கூட்டணிக் கட்சியான பாஜகவின் தலைவர்களிடம் வெளிப்படையாகவே தனது புலம்பல்களை ஷேர் செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.. அந்தவகையில், தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களில் காட்டும் வேகமும், நிதி ஒதுக்கீடும் புதுவை அரசுக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.. தேர்தல் நெருங்கும் வேளையில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வேண்டுமானால் இத்தகைய திட்டங்கள் அவசியம் என்பதை மூத்த தலைவரான ரங்கசாமி நன்றாக உணர்ந்துள்ளார்..

நிதி ஒதுக்கீடு

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ரங்கசாமி விரைவில் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளாராம்.. அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, புதுச்சேரிக்கான சிறப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க போகிறாராம்..

குறிப்பாக, இந்த தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றி பெற வேண்டுமானால், இந்த நிதி ஒதுக்கீடு மிக முக்கியமானது என்றும், இல்லையென்றால் தேர்தல் முடிவுகள் சாதகமாக இருக்காது என்றும் அவர் டெல்லி மேலிடத்திடம் கறாராக சொல்லப் போவதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன..

இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், புதுவை மாநிலத்தின் நிதிச் சுமை மற்றும் தமிழகத்தின் நலத்திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம் ஆகிய இரண்டுக்கும் இடையே ரங்கசாமி சிக்கித் தவிப்பது தான் இன்றைய புதுவை அரசியலின் ஹாட் டாபிக் ஆகும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+