தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு.. ரஜினி ரசிகர்கள் பக்திப் பரவசம்.. புதுச்சேரியில்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றார்கள்.

Rajinikanth birthday celebration in puducherry

அந்த வகையில் புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்றத்தினர், புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் கோவிலுக்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

Rajinikanth birthday celebration in puducherry

இதேபோன்று ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள், மசூதிகளில் மும்மத பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். மேலும் இன்று ஒரு நாள் முழுவதும் ஆதரவற்ற இல்லங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+