புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தி வந்த போராட்டம் ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி கடந்த 3 நாட்களாக விடிய விடிய நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    புதுச்சேரி: தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தர்ணா: வரும் 22-ல் கையெழுத்து இயக்கம்.. முதல்வர் அறிவிப்பு!

    புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி- முதல்வர் நாராயணசாமி இடையே உச்சகட்ட மோதல் நிலவுகிறது. யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்பது முதல்வர் நாராயணசாமி கூறி வருகிறார். ஆனால் புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்பதால் புதுவை அரசின் அன்றாட செயல்பாடுகளில் தொடர்ந்து தலையிடுகிறார் கிரண்பேடி. இதற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த முதல்வர் நாராயணசாமி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தை நடத்தி வந்தார்.

    Sack Kiran Bedi: Puducherry Chief Ministers Protest postpone

    புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெறும்வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தை தொடங்கிய முதல்வர் நாராயணசாமி. இரவிலும் அங்கேயே படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தார்.

    இந்நிலையில் 3வது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து. இந்நிலையில் சற்று முன் செயதியாளர்களை சந்தித்த நாராயணசாமி, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஜனவரி 22ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும், ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

    கிரண்பேடிக்கு எதிரான புதுவை முதல்வர் நாராயணசாமியின் தொடர் போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிப்புகிரண்பேடிக்கு எதிரான புதுவை முதல்வர் நாராயணசாமியின் தொடர் போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிப்பு

    புதுச்சேரியில் பாஜக துணையுடன் இரட்டை ஆட்சி முறையை கிரண்பேடி நடத்தி வந்தார் என்றும் புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு ஆளுநர் கிரண்பேடிதான் காரணம் என்றும் நாராயணசாமி கூறினார். சட்டமன்றம் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும், உரிமையை பறிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

    English summary
    Puducherry Chief Minister V Narayanasamy had literally hit the road demanding the removal of Lieutenant Governor Kiran Bedi as he camped in protest on a road near her official residence for the third day in a trot. but puducherry Chief Minister Narayanasamy said now on Protest postphone temporarily.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X