முடிந்தது கோடை விடுமுறை.. திறந்தன புதுவையில் பள்ளிகள்
புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் இன்று முதல் இலவச பாடபுத்தகங்கள் மற்றும் சீருடை கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜீன் 3 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதனால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென பெற்றோர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கோடை விடுமுறையை 7 நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது.
பள்ளிகள் இன்று திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

முதல் நாளான இன்று மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பள்ளிக்கு வருகை புரிந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் கௌரவித்தனர். மேலும் அரசு பள்ளிகளில் இன்று முதல் இலவச பாடபுத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரியில் விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் திறப்பு இருந்தாலும் கூட தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூன் 3ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன என்பது நினைவிருக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications