"ஒருத்தர் அரசியலுக்கு எதுக்கு வந்திருக்கார்னே தெரியல”.. விஜய் மீது சீமான் மறைமுக அட்டாக்!
புதுச்சேரி: முதலீடு செய்து லாபம் கொழிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது. இப்போ ஒருத்தர் எதுக்கு வந்துருக்கிறோம் என்று கூட தெரியாமல் வந்திருக்கிறார். சின்னம் எது என்றால் முகம் என்கிறார் என விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார் சீமான்.
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் 28 தொகுதிக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், "புதுச்சேரி, தமிழ்நாட்டில் எல்லாவற்றிற்கும் இலவசம் என்பது வாழ்க்கை தரத்தை உயர்த்தாது. இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல. அது வீழ்ச்சி திட்டம். கவர்ச்சி திட்டம். இலவசம் பெறவேண்டிய ஏழ்மை, வறுமை இல்லாமல் எமது மக்களை உயர்த்த வேண்டும் என்பது எமது கடமை.

படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை. படிக்காதவரே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இலக்கு. ஆணும், பெண்ணும் சமம். இந்திய கட்சிகளுக்கு மும்மொழி கொள்கை திராவிட கட்சிகளுக்கு இருமொழி கொள்கை, எல்லாம் ஏமாற்றுக் கொள்கை. கொள்கை மொழி தமிழ். தமிழ் பயிற்று மொழி. ஆங்கிலம் கட்டாய பாடமொழி. பயன்பாட்டு, தொடர்பு மொழி. இதுதான் எங்கள் கோட்பாடு.
இதுவரை இந்த மாநிலத்தில் இருந்த அரசியல் அடித்தளத்தை நாம் தமிழ் கட்சியின் கோட்பாடும், தத்துவமும் தகர்க்கிறது. பல ஆண்டுகளாக ஆள் மாற்றம் ஆட்சி மாற்றம், அடிப்படை அமைப்பு அரசியல் அமைப்பு ஆட்சி முறை மாற்றம் வேண்டும், ஊழல், லஞ்சம், கொலை கொள்ளை எல்லாம் தெரிகிறது. அறம்சார்ந்த ஆட்சி வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்து வேண்டுமென 16 முறை சட்டசபையில் தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். இதில் வேறு மத்திய அரசுடன் இங்கு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டம் அரசியல் ஆகாது.. கொள்கை தான் அரசியலாகும். வாக்குகளை வாங்குவது, வாக்குகளுக்கு பணம் பெற கூடாதென மக்கள் நினைக்க வேண்டும். முதலீடு செய்து லாபம் கொழிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது. தமிழ்நாடு தேர்வாணையம் உள்ளது போல் புதுச்சேரிக்கு தேர்வாணையம் உருவாக்க வேண்டும்.
இப்போ ஒருத்தர் எதுக்கு வந்துருக்கிறோம் என்று கூட தெரியாமல் வந்திருக்கிறார். சின்னம் எது என்றால் முகம் என்பார். நாம் தமிழர் கட்சி தனித்து நின்று போட்டியிடும். நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். வேளாண் குடிமக்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒவ்வொரு முறையும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் ஏன் விவசாயி மட்டும் கடனாளியாக இருக்கிறான்? உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களின் விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications