பஞ்சாயத்து.. புதுச்சேரியிலும் பாஜக தோல்வி.. பதவி விலகுங்க தலைவரே.. ஒரே போடாக போட்ட சாமிநாதன்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி : லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று புதுச்சேரி பாஜக மாநில தலைவர் செல்வகணபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன் கொந்தளித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. புதுச்சேரியில் பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போதும், காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. பாஜக சார்பாக களமிறக்கப்பட்ட நமச்சிவாயம் 1,36,516 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் 4,26,005 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 Puducherry BJP 2024 2024

இது பாஜக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் தோல்வியையடுத்து புதுச்சேரி பாஜகவில் பிரச்சனை எழுந்துள்ளது. புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பாஜகவின் மாநிலத் தலைவர் செல்வ கணபதியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவுக்கு அமைப்பு ரீதியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி கிளை, தொகுதி, மாவட்ட மற்றும் மாநிலத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது. பொறுப்பேற்ற அனைவரும் திறமையாக செயல்பட்டு 2021 சட்டசபைத் தேர்தலில் 6 உறுப்பினர்களை வெற்றிபெற வைத்தனர். அதனால் கூட்டணி ஆட்சியில் பாஜக பங்கு பெற்றது. தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களும் செய்யப்பட்டது.

வேலைவாய்ப்புகள் நேர்மையான முறைகளில் நிரப்பப்பட்டு மக்கள் விரும்பும் நல்ல அரசாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் எந்த அனுபவமும் இல்லாமல் திடீரென்று கட்சி தலைமை பொறுப்பேற்ற தலைவர் செல்வகணபதி தன்னுடைய மோசமான நிர்வாக திறமையால் பாஜகவின் அனுபவ நிர்வாகிகளை நீக்கிவிட்டு சொந்த நிறுவனம் போல் கடந்த 6 மாதங்களாக கட்சியை தவறாக வழிநடத்தி முதல்முறையாக ஆளுங்கட்சியில் அமைச்சராக உள்ள ஒரு வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதற்கு செல்வகணபதியே காரணம். அதனால் தார்மீக பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை செல்வகணபதி ராஜினாமா செய்ய வெண்டும்.

அதேபோல் பாஜகவில் கடந்த முறை லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று 2வது இடத்திற்கு வந்த என்னை தேர்தல் பணி செய்யவிடாமல் சதி செய்து லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது என் தொகுதி.. நான் வைத்தது தான் சட்டம் என்று சுயநலமாக சிந்தித்து பல நிர்வாகிகளை வேலை செய்யவிடாமல் தடுத்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற வைத்த பெருமையும் செல்வகணபதியையே சேரும். இதனால் கட்சியின் நலன் கருதி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+