"எளிமையான முதல்வர்”.. புதுச்சேரி CM ரங்கசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார். அதன்படி, அவருக்கு மொத்தமாக ரூ.36 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள விவரங்களின் படி, அவரிடம் 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. மேலும், ஒரு முத்துச் செயின், ஒரு மோதிரம் போன்ற நகைகளும் அவரது சொத்து பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ரூ.27.78 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிமையான தலைவர் எனப் பெயர் பெற்ற ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூபாய் 36 கோடி.

புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 23 ஆம் தேதியுடன் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. புதுச்சேரி மாநில முதல்வரும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்பு மனுவுடன் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல்களின்படி, ரங்கசாமியின் ஆண்டு வருமானம் 2020 -21 இல் ரூ.4 லட்சத்துக்கு 52 ஆயிரத்து 140 ஆக இருந்தது. இது 2021-22 இல் ரூ.3 லட்சத்துக்கு 15 ஆயிரத்துக்கு 990 ஆக இருந்தது. 22-23 ஆம் ஆண்டில் 4 லட்சத்துக்கு 58 ஆயிரத்து 80 ஆகவும், 23-24 இல் ரூ.4 லட்சத்துக்கு 60 ஆயிரம் 400 ஆக இருந்தது. 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 110 ஆக இருக்கிறது. மேலும் கையிருப்பில் ரூ. 33 ஆயிரத்து 339 இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளையில் ரூபாய் 49,632 இருப்பதாகவும், ஹெச்டிஎப்சி வங்கிக் கணக்கில் 98,241 ரூபாய் உள்ளது. 21 லட்சத்து 25 ஆயிரத்து 752 மதிப்புள்ள இரண்டு மோட்டாா் சைக்கிள், 2 காா்கள், ஒரு முத்து செயின், ஒரு மோதிரம் உள்ளிட்ட பொருள்கள் இருப்பதாகவும் ரங்கசாமி கூறியுள்ளார்.
தட்டாஞ்சாவடி பகுதியில் 20 ஆயிரம் சதுர அடியில் ரூ.8 கோடி மதிப்பிலான இடம் இருப்பதாகவும், தட்டாஞ்சாவடி பகுதியில் 25 ஆயிரம் சதுர அடியில் ஒன்றும், 40 ஆயிரம் சதுர அடியில் மற்றொன்றும் என்று இரண்டு இடங்கள் இருக்கின்றன. இதில் 2,400 சதுர அடியில் கட்டடம் இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.27 கோடியே 78 லட்சம்.
தனது கடன் விவரத்தையும் அவர் வெளிப்படையாக பதிவு செய்து உள்ளார். அதன்படி, ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் அளவில் கடன் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தன் மீது எந்த விதமான குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை வெளிப்படுத்துவது தேர்தல் வெளிப்படைத் தன்மைக்கு முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், எளிமையான தலைவர் எனப் பெயர் பெற்ற புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு உள்ள சொத்து விவரங்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
-
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம்












Click it and Unblock the Notifications