இரவு நேரம் ஒரே பரபரப்பு.. புதுச்சேரி எக்ஸ்பிரஸ் திடீரென தடம் புரண்டு விபத்து.. பதறிய பயணிகள்
புதுச்சேரி விரைவு ரெயில் மாட்டுங்கா ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டது
புதுச்சேரி: புதுச்சேரி விரைவு ரெயில் மாட்டுங்கா ரெயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், இரவு நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் இருந்து மும்பைக்கு தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.. அதன்படி, நேற்றிரவு 9.45 மணிக்கு இந்த ரயில் மும்பை மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது.

அப்போது ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.. இதுகுறித்த தகவல் அறிந்து உடனடியாக விரைந்த ரயில்வே போலீசார் மற்றும் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்...
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை... ஆனால், விபத்தில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு உதவி செய்ய ரெயில்வே போலீசார் ரெயில்வே நிர்வாகத்துடன் இணைந்து உடனடியாக ஏற்பாடுகளை செய்தனர்.. எனினும் பயணிகள் கலக்கமும், பதற்றமும் நிறைந்து காணப்பட்டனர்.
மேலும், அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணையும் உடனடியாக துவங்கப்பட்டுவிட்டது.. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன..
முதற்கட்ட விசாரணையில், ரெயில் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே அடுத்த தண்டவாளத்தில் சென்ற ரயிலுடன் உரசியதால் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது..
அதாவது, தாதர்-புதுச்சேரி சாளுக்யா எக்ஸ்பிரஸ், தாதர் டெர்மினஸின் பிளாட்பார்ம் 7-ல் இருந்து டவுன் ஃபாஸ்ட் லைனில் நுழைந்தபோது, கிராசிங்கின் பின்பக்கத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் அதை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.. இந்த மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ரயில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications