புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. விமானம் மூலம் கொண்டு வந்து உதவிய தமிழிசை!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவையில் ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    கூடுதலாக 1,10,000 தடுப்பூசி: அனுப்பிய மத்திய அரசு.. தமிழிசை தகவல்!

    புதுச்சேரி மாநிலத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் தெலுங்கானாவில் இருந்து தனி விமானம் மூலம் ஆயிரம் அளவுகள் கொண்ட ரெம்டெசிவிர் மருந்துகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரிக்கு கொண்டு வந்தார்.

     Tamilisai Soundararajan has warned stern action will be taken if Remdecivir drugs are sold on the counterfeit market

    பின்னர். புதுச்சேரி விமான நிலையத்தில் சுகாதாரத்துறை செயலர் அருணிடம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது:-

    புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து தெலுங்கானா சுகாதாரத்துறை மற்றும் முதல்வர் ஆகியோர் ஒத்துழைப்பின்படி ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தெலுங்கானாவில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

     Tamilisai Soundararajan has warned stern action will be taken if Remdecivir drugs are sold on the counterfeit market

    மேலும் தேவையான நபர்களுக்கு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மக்கள் மத்தியில் தடுப்பூசி திருவிழாவிற்கு வரவேற்பு உள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நீட்டிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவர் மருந்தை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+