தமிழக சிலைகளை மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி: தமிழ்நாட்டின் புராதான சிலைகளை மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன் அரசாங்க திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் மேற்கொண்டு வரும் பணிகளுக்காக மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியை தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் பற்றி தமிழிசை கேட்டறிந்தார்.
அதேபோல், புதுச்சேரியில் நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவது பற்றியும் பல மத்திய அரசு சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் புதிய திட்டங்கள் கொண்டு வருவது தொடர்பாகவும் மத்திய அமைச்சருடன் தமிழிசை சௌந்தரராஜன் விவாதித்தார்.
அப்போது மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, தமிழ்நாட்டின் புராதன சிலைகளை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பற்றி தமிழிசை சௌந்தரராஜனிடம் விளக்கமளித்தார். இதனை கேட்ட அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தமிழக மக்களின் உணர்வுகளோடு ஒன்றிய தமிழக புராதன சிலைகளை மீட்டெடுத்து ஒப்படைத்ததற்கு மத்திய இணை அமைச்சர் வாயிலாக மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications