தாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி
புதுச்சேரி: தாய், மகள் வயலில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்த இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி நோணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. கணவரை இழந்த இவர் இரண்டு மகள்கள் ஒரு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இடையார்பாளையம் அருகே உள்ள தனது வயலுக்கு சென்ற, விஜயலட்சுமியும் அவரது மகளும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க, ஏ.டி.எஸ்.பி., பாண்டியன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதலில் சொத்து பிரச்சினை தொடர்பாக இந்த இரட்டை கொலை நடந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, விஜயலட்சுமியின் உறவினர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் இளநீர் வியாபாரி இருசப்பன் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகைக்காகத் தாய் மற்றும் மகள் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும், நகைகளைக் கொண்டு சென்று அடகுக் கடையில் வைத்தபோது, அதில் பாதி நகை கவரிங் நகைகள் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்ததாகவும் இருசப்பன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, இளநீர் வியாபாரியைக் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இரண்டு கிராம் தங்க நகையைப் பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருசப்பன் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications