புதுச்சேரியில் பந்த்.. பஸ் ஓடலை.. கடைகள் அடைப்பு.. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!
புதுச்சேரி: மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்று வரும் பந்த் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவன விற்பனை மற்றும் பங்கு விலகலை கைவிட வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியூசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற் சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்துடன் பந்த் போராட்டமும் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கைவிடக்கோரியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 6 மணிக்கு துவங்கியுள்ள பந்த் போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி நகரம் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஆட்டோ, டெம்போ இயங்கவில்லை. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படு வருகிறது.

திரையரங்குகளில் காலை, பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் பெரிய மார்க்கெட், நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் வீதி, குபேர் அங்காடி, நெல்லித்தோப்பு மார்க்கெட், முத்தியால்பேட்டை மார்க்கெட் ஆகிய பகுதியில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

தொழிற் சங்கங்களின் பந்த் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications