எல்.முருகனுக்கு எம்.பி. பதவிக்காக.. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியுடன் மல்லுக்கட்டும் பா.ஜ.க!
புதுவை: மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எம்.பி. பதவிக்காக புதுச்சேரியில் ராஜ்யசபா சீட்டை பா.ஜ.க.வினர் கேட்டு வருகின்றனர். புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15-ந் தேதியே தொடங்கி விட்டது. இந்த ராஜ்யசபா சீட்டை பெற கடும் போட்டியே நடந்து வருகிறது.

எல்.முருகன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க என முன்று கட்சிகளும் அந்த இடத்தை கேட்டு வருகின்றன. பா.ஜ.க.வை பொறுத்தவரை மத்திய அமைச்சராக உள்ள தமிழக முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அந்த சீட்டை கேட்டு வருகிறது.

ஆலோசனைக்கூட்டம்
இந்த நிலையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் தனியார் விதியில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ராஜ்யசபா சீட்டு தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

ராஜ்யசபா சீட்
புதுச்சேரி சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க.விற்கு ராஜ்யசபா சீட் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதை கட்சியின மேலிடமும் உறுதி செய்துள்ளதால் இந்த தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம் என்று கூறினார்.

ஆதரவு கோரினார்கள்
மேலும் ராஜ்ய சபா தேர்தலில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு சீட் ஒதுக்கப்படுமா? என அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு இது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று அவர் கூறினார். இதன்பிறகு அனைத்து பா.ஜ,க சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திற்கு சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்து ராஜ்யசபா தேர்தலில் பாஜக போட்டியிட ஆதரவு கோரினார்கள்.

இரு எம்.பி.க்கள்
யூனியன் பிரதேசமான புதுவையில் இரு எம்.பி.க்கள் உள்ளனர். மக்களால் தேர்வான மக்களவை உறுப்பினராக காங்கிரஸைச் சேர்ந்த வைத்திலிங்கம் உள்ளார். எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைதால் ஒரு இடம் காலியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications