மோடி அய்யா.. மோடி அய்யா சோறு போடய்யா.. உருக உருக பாடிய புதுவை சிறார்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு கொரோனா நிதியுதவி வழங்க வலியுறுத்தி, சிறுவர்கள் பாடல் மூலம் பிரதமா் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், புதுச்சேரியில் வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறை மூலம் வரும் வருமானமும் முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், ஏழை மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் ரூபாய் 995 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி தொடா்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி வருகிறாா். ஆனால், புதுச்சேரிக்கு நிதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் நாங்கள் படும் கஷ்டங்களைப் பாருங்கள் என்றும், புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியளித்து உதவ வேண்டுமெனவும் சிறுவர்கள் பாடல் மூலம் பிரதமா் மோடிக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவர்கள் பாடியுள்ள அந்த வீடியோவில், மோடி அய்யா, மோடி அய்யா சோறு போடய்யா.. புதுச்சேரி மக்களுக்கு நிதி கொடுங்கய்யா.. வீட்டிலே இருக்கிறோம், நீங்க சொன்னதனாலய்யா.. நோயைவிடக் கொடுமை பசிதானய்யா, எங்களுக்குப் பிரதமர் நீங்கதான அய்யா. நாங்களும் உங்களோட மக்கள் தான அய்யா. 144 தடைபோட்டு, 21 நாள் அடைபட்டுள்ளோம், புதுச்சேரி மக்களுக்கு நிதி கொடுங்க என்று பாடியுள்ளனர். மனதை உருக வைப்பதாக உள்ளது இந்த சிறார்களின் குரல்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications