‘லியோ’ டிக்கெட் தரலன்னா தியேட்டரே இருக்காது.. மிரட்டும் எம்.எல்.ஏ.. புதுச்சேரி தியேட்டர் ஓனர் புகார்
புதுச்சேரி: நாளை வெளியாகும்'லியோ' படத்திற்கு டிக்கெட் தராவிட்டால் தியேட்டரை உடைப்போம் என்று ஆளுங்கட்சி ஆதரவு எம்எல்ஏ நேரு மிரட்டுவதாக அவர் மீது தியேட்டர் உரிமையாளர் போலீசில் புகார் தந்துள்ளார்.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. நாளை காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் முதல் ஷோ வெளியிடப்பட உள்ளது. 'லியோ' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இந்த வாரம் முழுக்க பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது.

புதுச்சேரியிலும், 'லியோ' படம் வெளியாகும் நிலையில் அங்கு காலை 7 மணி ஷோ திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், விநியோகஸ்தர்கள் அனுமதி அளிக்காததால் முதல் ஷோ 9 மணிக்கு என மாற்றப்பட்டது. தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சி தொடங்கும் அதே நேரத்தில் புதுச்சேரியிலும் முதல் காட்சியை தொடங்க உள்ளது. லியோ டிக்கெட்டுகள் முதல் நாள் காட்சிகளுக்கு விற்றுத் தீர்ந்துள்ளன.
புதுச்சேரி திருவள்ளூவர் சாலையில் ஷண்முகா சினிமாஸ் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கின் உரிமையாளர் சுரேஷ், உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அவரது புகார் மனுவில், திருவள்ளுவர் சாலையில் எனக்கு சொந்தமான ஷண்முகா திரையரங்கம் இயங்கி வருகிறது. குறிப்பாக பெரிய நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது இந்த தொகுதி எம்எல்ஏ நேரு அதிக டிக்கெட்டுகளை தருமாறு கேட்பார்.

எனது திரையரங்கில் பெரும்பாலும் ஆன்லைன் வழியாக டிக்கெட் விற்பனையாவதால், இதனை அவரிடம் தெரிவித்து, டிக்கெட் தர முடியாத நிலையைச் சொல்வோம். தற்போது லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி 'லியோ' திரைப்படத்திற்கு காலை 9 காட்சிக்கான டிக்கெட்டுகளை விற்றுள்ளோம்.
இந்தச் சூழலில் வழக்கம் போல் தொகுதி எம்எல்ஏ எனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு டிக்கெட் கேட்டு மிரட்டினார். காலை காட்சி டிக்கெட் தராவிட்டால் தியேட்டரை அடித்து நொறுக்குவோம் என அவரது ஆதரவாளர்கள் என்று சிலர் மிரட்டுகின்றனர். தியேட்டர் அருகே கூடி உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கின்றனர். இதுதொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவான நேரு, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏவாக உள்ளார். 'லியோ' படம் நாளை ரிலீஸாகும் நிலையில், டிக்கெட் கேட்டு மிரட்டுவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications