அரசியலில் கம்முனு எல்லாம் இருக்க கூடாது.. பேச வேண்டிய இடத்தில் பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ்
புதுச்சேரி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டுகிறார்கள். விஜய் கடந்த வாரம் புதுச்சேரி சென்றிருந்தார். இந்நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று புதுச்சேரி சென்றார். அங்கு அவர் விஜய்யின் வைரல் வசனத்தை வைத்தே அவருக்கு அட்வைஸ் செய்திருப்பது தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும். கும்முனு இருக்க வேண்டிய இடத்தில் கும்முனு இருக்கணும். இதை சொன்னது விஜய் தானே. அரசியலில் அப்படி இருக்க முடியுமா. விஜய் கம்முனு இருப்பாரோ, கும்முனு இருப்பாரோ பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும்.

அதை விஜய்யிடம் சொன்னாலே அவர் நல்ல அரசியல்வாதியாக வருவார். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கின்றன. எது நடந்தாலும் நான் வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை வழங்குவார்கள். சரியை சரி என்றும், தவறை தவறு என்றும் வெளிப்படையாக சொல்லுங்கள் விஜய்.
இதே விஜய் புதுச்சேரிக்கு வந்தார். பாஜக கூட்டணி ஆட்சியில் ஒரு எம்எல்ஏ மந்திரி ஆகிவிட்டார். சிறுபான்மையினர் என்பதால் பொறுப்பு வழங்கப்படவில்லை என்று விஜய் பேசினார் தானே. அன்றைக்கு சிறுபான்மையினர் என்று பேசிய விஜய், திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களுக்காக ஏன் பேசவில்லை. புதுச்சேரி மக்கள் விஜய்யை பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும்.
தேர்தல் களத்தில் மோதுவோம். நியாயமான விஷயங்களுக்கு ஒன்றாக இருப்போம் என்று விஜய்யிடம் கூறிக் கொள்கிறேன். இந்திய அரசியலில் திமுகவை போல மோசமான தோல்வியை சந்தித்த கட்சி வேறு இல்லை. வரலாறு கிடையாத தோல்விகளை சந்தித்துள்ளனர். எத்தனையோ தேர்தல்களில் பூஜ்ஜியம் எடுத்துள்ளனர். தேர்தல் குறித்து பாஜகவுக்கு ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம். அமித்ஷா மக்களிடம் நியாயத்தை பேசுவார்.
ஏதோ சில தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதற்காக ஸ்டாலின் மரத்தின் மீது இருந்து கூவ வேண்டாம். 2026 தேர்தலில் மக்கள் உங்களை ஆட்சியில் இருந்து இறக்கிவிட தான் போகிறார்கள். இதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். என்றார். விஜய் வசனத்தை வைத்து, அவருக்கு அண்ணாமலை அட்வைஸ் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்











Click it and Unblock the Notifications