ஆஹா.. "வால்" முழுவதும் வள்ளுவம் வாழ்கிறதே.. புரட்சி படைக்கும் புதுச்சேரி!
புதுச்சேரி: திருக்குறளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் புதுமையான முயற்சியாக புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதியில் வீடுகள் தோறும் திருக்குறள் எழுதப்பட்டு வருகிறது.
வாழ்வியல் நெறிகளை ஒன்றரை அடியில் விளக்கும் திருக்குறள் உலக மறையாக விளங்குகிறது. திருக்குறளைப் பற்றி தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் புகழ்ந்து பேசுகின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் என்ற தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை. பொதுவாக திருக்குறள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்துகள், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்களில் எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். மேலும் பொது நிகழ்ச்சிகள் தொடங்கும் முன் திருக்குறள் வாசிக்கப்பட்டே தொடங்கும்.

புதிய முயற்சி
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருக்குறளை பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதி மக்கள் புதுமையான முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

வீடுகள் தோறும்
அதாவது சுமார் 3 ஆயிரம் வீடுகளை கொண்ட நைனார் மண்டபம் பகுதியில் உள்ள வீட்டு சுவர்களில் அவற்றின் உரிமையார்களிடம் அனுமதி பெற்று திருக்குறள் எழுதப்பட்டு வருகிறது.

அருமையான முயற்சி
இதை அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் படிப்பதால் அதில் உள்ள கருத்துகள் மனதில் பதிவாகி நல்லொழுக்கம் மேலோங்குகிறது. மேலும் திருக்குறளின் அருமை, பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இதனால் தேவையில்லாத விளம்பரங்களால் சுவர் அலங்கோலமாவதும் தடுக்கப்படுவதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

மாணவர்கள்
மேலும் இந்த பகுதி மக்களின் நல்லெண்ண முயற்ச்சிக்கு உதவுவதற்காக அரசின் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள், தங்களுடைய கல்லூரி முடிவடைந்ததும் மாலை நேரத்தில் திருக்குறள் எழுதும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குவிகிறது பாராட்டு
திருக்குறளை பாமரர்களிடம் கொண்டு செல்லும் நைனார் மண்டபம் மக்கள் இயக்கதின் இந்த பணியை மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் பார்த்து பாராட்டிச் செல்கின்றனர். இதேபோன்று பிற இடங்களில் வசிப்பவர்களும் தங்களது வீடுகளில் திருக்குறளை எழுத முன்வருவார்களாயின் வள்ளுவனின் புகழ் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்துமில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications