புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நடைபெறும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி கிடையாது என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதியில் புதுச்சேரி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். விஜய் பங்கேற்ற கூட்டங்களில் திரளாக மக்கள் பங்கேற்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் திறந்த வேனில் நின்றபடி அவர் மக்களை சந்தித்து உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அலைகடலென த.வெ.க. தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. த.வெ.க சார்பில் உள் அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உள்ளரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விஜய் பேசினார். இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டம் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெறுகிறது. புதுச்சேரியில் ரோடு ஷோ சென்று மக்களை சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி புதுச்சேரி போலீசார் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்கவில்லை. ரோடு ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டத்தை நடத்தி கொள்ளுமாறு த.வெ.க நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான அனுமதி கேட்டு த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சரான நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து விஜய்யின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கியூ.ஆர்.கோடுடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்துள்ள 5 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க உள்ளனர். மக்கள் நிற்பதற்கு பாக்ஸ்கள் தடுப்பு கட்டைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 45 நிமிடம் த.வெ.க தலைவர் விஜய் பேச திட்டமிட்டுள்ளார். புதுச்சேரியில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் அனுமதி கிடையாது என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி உப்பளத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தவெக தலைவர் விஜய்யின், 'புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி' நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. தலைவர் விஜய், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாதவர். எனவே, புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, தொண்டர்களும், பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள்,முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளி சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. தலைவர் விஜய், நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும் போதும் அவரது வாகனத்தை பின் தொடர்வதை தவிர்க்க வேண்டும்.
காவல்துறையின் விதிகளுக்குட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்கும் வகையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எளிதில் அடையாளம் காணும் வகையில், நிர்வாகிகள் அனைவரும் கட்சி சார்பில் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்க கூடாது. அரசு கட்டிடங்கள், மரங்கள், வாகனங்கள், கொடி கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக்கூடாது. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் எவ்வித போக்குவரத்து இடையூறும் செய்ய கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications