Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ்ல.. சந்திர பிரியங்கா ஏறினதுமே, "ஆமா, திடீர்னு பிரேக் போட்டால் என்ன பண்ணுவீங்க".. கலகல காரைக்கால்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவை அரசு போக்குவரத்து கழகத்தால் பஸ்களை இயக்க முடியாத சூழலில். தமிழக அரசு பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல, புதுச்சேரி அமைச்சரின் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

புதுச்சேரி மாஜி அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா.. 33 வயதுதான் ஆகிறது.. புகழ்பெற்ற இளம் அரசியல்வாதியும்கூட... காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு(தனி) சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றவர்.. இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது...

tn gov bus and puducherry transport minister chandra priyanka who took ticket in tn government bus

அபார வெற்றி: புதுச்சேரி அமைச்சரவையில் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றது இதுவே முதல்முறை என்ற பெயரையும் பெற்றவர்.. நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த நெடுங்காடு தொகுதியின் உறுப்பினர் சந்திர பிரியங்காதான் அந்த பெருமையை தட்டி சென்றார்...

தனக்கு ஒதுக்கப்பட்ட துறையை மிகவும் சிறப்பாகவே கவனித்து வருவதாக மிக குறுகிய காலத்தில் இவர் பெயரும் எடுத்தவர். அதுமட்டுமில்லாமல், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.. புதுச்சேரி மக்களிடம் இவர் ரொம்ப பிரபலம்.. திடீர் திடீரென நேரடி ஆய்வுக்கு கிளம்பிவிடுவார்.. பொதுமக்களிடம் நெருங்கி பழகி, அவர்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்வதால், மக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார்.

வெட்கம் முளைக்குது: இவர் பொதுமக்களுடன் நெருங்கி பழகும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.. இப்படித்தான், தன் உறவினர் வீட்டு கல்யாணத்தில், "புதுசா ஒரு வெட்கம் முளைக்குது, வெப்பமடிக்குது" இவர் ஆடிய நடனம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு மகளிர் தினத்தன்று, அம்மன் வேடமிட்ட இவரது வீடியோவும் வைரலாகியது.. வணிக நிறுவனம் ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுத்த சிறுவனிடம் 'நான்தான் அமைச்சர் நம்புடா" என்று விளையாடும் வீடியோவும் வைரலானது..

இப்போதும் ஒரு வீடியோ வைரலாகிறது.. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைத்து பஸ் சேவையை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்திருந்தனர்...

தமிழக அரசு சேவை: இதனையடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனின் முயற்சியால் காரைக்கால்-கும்பகோணம் வரை செல்லும் தமிழக அரசு பஸ் சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த பஸ் சேவையானது, கருக்குங்குடியில் இருந்து தொடங்கப்பட்டது. புதிய பஸ் சேவையை அமைச்சர் சந்திர பிரியங்கா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

அத்துடன், அதே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. பஸ்ஸுக்குள் அமைச்சர் ஏறியதுமே, அந்த கிராம மக்களும் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.. அமைச்சருக்கு வணக்கம் வைத்தபடியே உள்ளே சென்று சீட்டில் ஒவ்வொருவராக அமர்ந்தனர்.. பிறகு அமைச்சர் தன்னிடமிருந்து காசு எடுத்து, கண்டக்டரிடம் தந்து டிக்கெட்களை வாங்கினார்.. தன்னுடன் பயணித்த கிராம மக்களிடம் கேஷுவலாகவும், ஜாலியாகவும் பேசிக் கொண்டே வந்தார்..

tn gov bus and puducherry transport minister chandra priyanka who took ticket in tn government bus

பிரேக்: "இப்படிதான், மற்ற எல்லா பஸ்லயும் ஏறி செக் பண்ணனும்.. அப்பதான், அந்தந்த பஸ்களில் என்னென்ன சரி செய்யணும்னு நமக்கு தெரியும்.. ஆமா, பஸ் வேகமாக போய்ட்டு இருக்கும்போது, திடீர்னு பிரேக் போட்டால் என்ன பண்ணுவீங்க நீங்க எல்லாரும்? என்று கேட்டதுமே, பயணிகள் அனைவரும் சிரித்துவிட்டனர்.. அமைச்சரின் இந்த பஸ் பயண வீடியோதான் இணையத்தில் வைரலாகிறது.

பொதுவாக, அமைச்சர்கள் என்றாலே இறுக்கமாகவும், டென்ஷனாகவும் இருப்பது வழக்கம்.. காரணம், ஒதுக்கப்பட்டுள்ள அவர்களின் துறைகள், அந்த அளவுக்கு பொறுப்பு வாய்ந்தது.. பரபரப்புடன் எந்நேரமும் இயங்கி கொண்டே இருப்பவர்களும்கூட.. அதனால், சில அமைச்சர்களிடம் நெருங்கி பேசவே ஒரு தயக்கம் மக்களிடம் இருந்து வருகிறது..

வைரல் வீடியோ: ஆனால், சந்திர பிரியங்காவை பொறுத்தவரை, இளம்வயது என்பது ஒருபுறம் இருந்தாலும், இயல்பாகவே அனைவரிடமும் கேஷுவலாக பேசக்கூடியவராக இருக்கிறார்.. தன் தொகுதிக்கான பணிகளில் குறைகள் இல்லாமல் அனைத்தையும் செய்து வந்தாலும், அவ்வப்போது, இப்படி மக்களிடம் இயல்பாக பேசுவதும், ஈகோ இல்லாமல் பழகுவதும், மக்களை இவரிடம் நெருங்க வைத்திருப்பதாகவே சொல்கிறார்கள் புதுச்சேரி மக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+