Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பகல்னா மோரு.. நைட்டானா பீரு.. 40% சேல்ஸ் அதிகரிப்பு! வெயிலை தணிக்க புதுவையில் குவியும் குடி அடிமைகள்

Subscribe to Oneindia Tamil

புதுவை: பாண்டிச்சேரியில் எப்போதுமே மது விற்பனை அதிக அளவில் இருக்கும் நிலையில், தற்போது கோடை துவங்கியிருப்பதால் பீர் விற்பனை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக 2 லட்சம் கேஸ் பீர்கள் விற்பனையாகும் நிலையில் தற்போது மாதம் 3 லட்சம் கேஸ் பீர்கள் விற்பனை ஆவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

Tourists Shows intrest in Beer-loving during summer - sales increased by 40 percent in Puducherry

மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், தர்ப்பூசணி, சர்பத் என குளிர்ச்சியான உணவுப்பொருட்களை நாடி செல்கின்றனர். சாலையோரங்களில் உள்ள இத்தகைய கடைகளில் மக்கள் வெயிலுக்கு சற்று இளைப்பாறி விட்டு செல்வதை பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் காண முடிகிறது.

மதுப்பிரியர்களோ.. வெயில் காலங்களில் குளிர்ச்சியான பீரை அதிகம் ருசி பார்த்து விடுகின்றனர். இதனால், வெயில் காலங்களில் பீர் விற்பனை வழக்கத்தை விட அதிகரிக்கும். அந்த வகையில், நடப்பு ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுகு வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், பீர் விற்பனையும் வழக்கத்தை விட 40 மடங்கு அதிகரித்துள்ளதாக புதுவை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாண்டிச்சேரி என்றாலே பலருக்கும் முதலில் நியாபகத்திற்கு வருவது அங்கு கிடைக்கும் மது வகைகள்தான். யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் அண்டை மாநிலமான தமிழகத்தை விட மதுவின் விலை வெகுவாக குறைவாக இருக்கும். வெளிநாடு மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மது வகைகள் என சுமர் 900 பிராண்ட்கள் புதுவையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதுவையில் கிடைக்கும் வித விதமான மது வகைகளை ருசிப்பதற்காகவே புதுச்சேரிக்கு மதுப்பிரியர்கள் பலரும் படையெடுப்பதுண்டு. இந்தியாவில் தயாரிக்கப்படும் பீர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு பிராண்ட் பீர்களும் புதுவையில் கிடைக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் மதுப்பிரியர்கல் குட்டி கோவா என்று அழைக்கப்படும் பாண்டிச்சேரிக்கு வந்தாலே மதுவை ஒரு கை பார்த்து விடுவதுண்டு.

Tourists Shows intrest in Beer-loving during summer - sales increased by 40 percent in Puducherry

இதனால், பாண்டிச்சேரியில் எப்போதுமே மது விற்பனை அதிக அளவில் இருக்கும் என்றாலும் தற்போது கோடை துவங்கியிருப்பதால் பீர் விற்பனை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக 2 லட்சம் கேஸ் பீர்கள் விற்பனையாகும் நிலையில் தற்போது மாதம் 3 லட்சம் கேஸ் பீர்கள் விற்பனை ஆவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோடைக்காலம் துவங்கியிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மது வகைகளை விட பீர் குடிப்பதற்கே ஆர்வம் அதிகரித்து இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+