டிடிவி தினகரன் மகளுக்கும் பூண்டி வாண்டையார் பேரனுக்கும் புதுவையில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்
புதுவை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினிக்கும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பூண்டி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் புதுவையில் எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கொரோனா லாக்டவுன் காலத்தில் புதுவை பண்ணை இல்லத்தில்தான் தங்கி உள்ளார். புதுவையில் இருந்தபடியே பல்வேறு அரசியல் நகர்வுகளையும் தினகரன் மேற்கொண்டு வருகிறார்.

புதுச்சேரியில் பல முக்கிய பிரமுகர்களையும் தினகரன் சந்தித்து பேசி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தினகரனின் மகள் ஜெயஹரினிக்கும் தஞ்சாவூர் பகுதியில் பிரபல குடும்பமான பூண்டி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தினகரனின் புதுவை பண்ணை இல்லத்தில்தான் இந்த நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடைபெற்றது. இதில் இரு குடும்பங்களின் உறவினர்கள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
மணமகன் ராமநாதன் துளசி அய்யாவின் தாத்தா பூண்டி துளசி வாண்டையார் தமிழகம் நன்கு அறிந்த பிரபலம். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தஞ்சாவூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக பணியாற்றியவர்.
பூண்டி துளசி வாண்டையார் மகன், கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவரது மகன் ராமநாதன் துளசி அய்யாதான் மணமகன். இவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தாலும் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி வந்த பின்னர் அவர் தலைமையில்தான் திருமணத்தை நடத்துவது என இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications