மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ்
புதுவை: தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ள தவெக புதுவையிலும் தனித்து விடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை புதுவையில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளார்.
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவை என 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுவையில் வரும் ஏப்ரல் 09 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.

நாளை மறுநாள் கடைசி நாள்
புதுவையில் வேட்பு மனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் மார்ச் 23 ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும். நாளை மறுநாள் தான் கடைசி நாள் என்பதால், அரசியல் கட்சிகள் விரைந்து தொகுதி பங்கீடை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.
புதுவையை பொறுத்தவரை சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக உள்ளது. மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களையும் சேர்த்து இந்த தொகுதிகள் உள்ளன. புதுவையை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், என்.ஆர் காங்கிரஸ் - பாஜக ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்க இருந்தன.
தவெக தனித்து போட்டி
இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால் அங்கு 3 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விஜய்யுடன் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவுடன் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் நாளை புதுவையில் தவெக சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்புமனு பரிசீலனை
என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இன்னும் தொகுதி பங்கீடு உறுதி ஆகிவிட்டது. ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு நிறைவு பெறவில்லை. இதற்கிடையே தான் விஜய் நாளை வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பை சென்றுள்ள விஜய் நாளை புதுவை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறார்.
புதுவையில் வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 24 ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனு திரும்ப பெறும் நாள் மார்ச் 26 ஆம் தேதி ஆகும். வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடக்கிறது.
-
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications