புதுச்சேரி அரசை பாராட்டிய விஜய்.. நன்றி சொன்ன ரங்கசாமி.. தவெக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி?
புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு பாராட்டு தெரிவித்த தவெக தலைவர் விஜய்க்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி நன்றி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள ஏராளமான பிரச்சனைகள் குறித்து விஜய் பேசிய போதும், என்ஆர் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவில்லை. தற்போது ரங்கசாமியும் விஜய்க்கு நன்றி கூறி இருப்பது, பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பின், தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் புதுச்சேரிக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பேன். அது என்னுடைய கடமை.. புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு போல் இல்லை.

வேறு ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் என்ற நிலையிலும் பாரபட்சம் காட்டாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசுக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் மனப்பூர்வமான நன்றி. இதனைப் பார்த்தாவது தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக கற்றுக் கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் திமுக 100 சதவிகிதம் நிச்சயமாக கற்றுக் கொள்ளும். மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பாதுகாப்பு பணிகளை பாராட்டியதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். புதுச்சேரியில் தவெக தரப்பில் முதற்கட்டமாக ரோடு ஷோவிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறை தவெகவின் கோரிக்கையை நிராகரித்தன. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடையோ நடை என்று நடந்தும் எந்த அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால் முதல்வர் ரங்கசாமியை பார்த்து புஸ்ஸி ஆனந்த் முறையிட்டார். இதையடுத்து தவெகவுக்கு பொதுக்கூட்டம் மட்டுமே நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அதிலும் தவெக கூறிய இடங்களை கடந்து, அரசு தரப்பில் கூறப்பட்ட இடத்திலேயே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிலும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்று நிபந்தனை வைக்கப்பட்டது. ஆனாலும் விஜய் புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனால் என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் விஜய் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்!












Click it and Unblock the Notifications