திடீரென வெடித்த டிவி.. 2 பேர் படுகாயம்.. புதுவையில் பரபரப்பு
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு வீட்டில் ஓடிக் கொண்டிருந்த டிவி திடீரென வெடித்துச் சிதறியதில் தீவிபத்து ஏற்பட்டு 2 பேர் காயடைந்தனர். அதேபோல இன்னொரு பகுதியில் நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் வீட்டில் வைத்திரு்த 150 பவுன் நகைகளை கும்பல் ஒன்று திருடிச் சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி வைத்தி குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முருகம்மாள். இவர் அருகில் உள்ள அங்காடியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது உறவினர் பெர்னேஸ் என்பவர் முருகம்மாளின் வீட்டில் தங்கிருந்து உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென டிவி வெடித்து, தீ மளமளவென வீடு முழுவதும் பரவி வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும் டிவி வெடித்ததால் பலத்த காயமடைந்த முருகம்மாள் மற்றும் அவரது உறவினர் பெர்னேஸ் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரித்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டுப் போன 150 பவுன் நகைகள்...!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி விவிபி நகரை சேர்ந்தவர் மருத்துவர் ரத்தின வடிவேல். இவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். ரத்தின வடிவேல் தனது மனைவி வள்ளியம்மாளுடன் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வங்கி லாக்கரில் இருந்த நகையை எடுத்துவந்து, சனிக்கிழமை மாலை கடலூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அன்று இரவே வீடு திரும்பிய ரத்தின வடிவேல் நகைகளை பீரோவில் வைத்து பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வீட்டில் உறங்கியுள்ளார். அப்போது நள்ளிரவு வீட்டினுள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 150 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். மேலும் பீரோவில் இருந்த கவரிங் நகையை திருடர்கள் சோதித்து பார்த்து எடுத்துசெல்லவில்லை.

இதனிடையே மறுநாள் காலை பீரோ திருந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரத்தின வடிவேல் கோரிமேடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி, தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, வங்கி லக்காரில் இருந்து தனது நகையை எடுத்து வந்த ரத்தின வடிவேல், இன்று காலை மீண்டும் வங்கியில் வைக்க திட்டமிட்டு இருந்தார். இதை அறிந்த நபர்கள் வீடு புகுந்நு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications