புதுச்சேரியை சுற்றி வேலி போட்ருவோம்.. உதயநிதி பேனரை அகற்றிய அதிகாரிகளை மிரட்டிய திமுகவினர்
புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பேனரை அனுமதியின்றி வைத்ததாக கூறி அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு தமிழகத்தை சேர்ந்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். மேலும் பேனர்களை அகற்றினால் முதல்வர், உள்துறை அமைச்சர் புதுச்சேரியை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வேலி போட்டு விடுவேன் என மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமி உள்ளார். இந்நிலையில் தான் புதுச்சேரி எல்லையில் மொரட்டான்டி என்ற கிராமம் உள்ளது. இது தமிழகத்துடன் சேர்ந்தது.

இந்நிலையில் தான் கடலூரை சேர்ந்த திமுக பிரமுகர்களின் திருமண விழாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலினை வரவேற்க பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தன.கண்டமங்கலம் கிழக்கு மத்திய ஒன்றிய திமுக சார்பில் புதுச்சேரி இசிஆர் சாலையில் உதயநிதிக்கான அலங்கார பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. பொதுவாக ஒரு பேனர் வைக்க வேண்டுமென்றால் உரிய முறையில் அனுமதி வாங்க வேண்டும்.
ஆனால் இதற்கு புதுச்சேரி பொதுப்பணித்துறையினரிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் உதவியுடன் பொதுப்பணித்துறையினர் அலங்கார வளைவு பேனர்களை அகற்றினர். இதுபற்றி அறிந்த திமுகவினர் பேனர்கள் அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திமுகவினர், ‛‛இனி ஒரு பேனரை அகற்றினாலும் புதுச்சேரியை தாண்டி ஒரு வண்டி கூட செல்லாது. நாங்கள் வாகனங்களை மறிப்போம். இந்திரா காந்தி சிக்னலில் வைக்கப்பட்ட பேனர்களை முதலில் அகற்றிவிட்டு வந்து எங்களின் பேனர்களை அப்புறப்படுத்துங்கள்.
மேலும் இப்படி செய்தால் புதுச்சேரி முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் புதுச்சேரியை விட்டு வெளியே வர முடியாது. சுற்றிலும் வேலி போட்டு விடுவோம். வரும் 8ம் தேதிக்கு உங்களின் அமைச்சருக்கு பிறந்தநாள் வருகிறது. அப்போது இங்கு வருவோம். பேனர்கள் இருந்தால் அதனை கொளுத்திவிடுவோம்'' என மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications