மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க மாட்டோம்… கமல்ஹாசன் பிரச்சாரம்
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சுப்பிரமணியனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், புதுச்சேரிக்கு என தனித் தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி, விவசாய தொழிலாளர்களுக்கு தனிவாரியம் அமைக்கப்படும். அரசின் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்; கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு தனி வாரியம்; தனி கல்வி வாரியம் அமைக்கப்படும்
பிராந்திய திட்ட குழுக்களின் மூலம் 4 பிராந்தியங்களிலும் சமமான வளர்ச்சி உருவாக்கப்படும். புதுச்சேரியில் இருந்து சென்னை, தூத்துக்குடிக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன .
இதனைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அரசியல்வாதிகளை கண்டு எழுந்த குமுறலில் உருவானதுதான் மக்கள் நீதி மய்யம் என்றார்.
படித்தவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறது என நம்புகிறது மக்கள் நீதி மய்யம் என்றும், நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அள்ளி வீசியது அல்ல; வடிகட்டி தயாரிக்கப்பட்டுள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை எனவும் விளக்கம் அளித்தார்.
புதுச்சேரியும் தமிழகம் தான், தனித்தன்மை வாய்ந்த தமிழகம் என்றும் மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க மாட்டோம் எனவும் கூறினார் .
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications