புதுச்சேரி அருகே இளம்பெண் குளித்ததை எட்டிப்பார்த்த புதுமாப்பிள்ளை.. உறவினர்கள் செய்த பெரிய சம்பவம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த பனையடிகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜகுரு என்பவருக்கு 34 வயது ஆகிறது.இவருக்கு கடந்த 3 மாதம் முன்பு தான் கல்யாணம் நடந்தது.இந்நிலையில் கடந்த சில நாள் முன்பு எதிர்வீட்டு பெண் குளிப்பதை எட்டிப்பார்த்ததாக புதுமாப்பிள்ளை ராஜகுரு மீது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் குற்றம்சாட்டினார்கள். இந்த விவகாரத்தில் அந்த பெண்ணின் உறவினர்கள் காத்திருந்து ராஜகுருவை என்ன செய்தார்கள் தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.
புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த பனையடிகுப்பம் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் ராஜகுரு என்பவருக்கு கடந்த 3 மாதம் முன்பு திருமணம் நடந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்வீட்டை சேர்ந்த இளம் பெண் குளித்ததை மாடியில் இருந்து எட்டிப்பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அந்த பெண்ணின் கணவர், ராஜகுருவிடம் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 19-ந் தேதி ராஜகுரு பனையடிக்குப்பத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன் குட்டை கொட்டகையில் படுத்திருந்தார். அங்கு சென்ற அந்த பெண்ணின் உறவினர் தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து ராஜகுருவை தட்டி எழுப்பி, அங்கு கிடந்த பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் தடியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்களாம்.
இந்த மோசமான தாக்குதலில் காயமடைந்த ராஜகுரு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுரு பரிதாபமாக இறந்தார். குறித்து அவரது அண்ணன் கதிரவன் கரையாம்புத்தூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபு (27) மற்றும் அவரது நண்பர்கள் சர்மா (24), முகிலன் (20), கரையாம்புத்தூர் சுமித் (20), அச்சுதன் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் இந்து முன்னணி பிரமுகர் கொலை
இதனிடையே புதுவையில் இந்து முன்னணி பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அண்மையில் நடந்துள்ளது. சொத்துப் பிரச்சினையில் உறவினர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடி சித்தனாந்தா நகரை சேர்ந்த துரை (வயது 49) இந்து முன்னணி பிரமுகர் ஆவார். இவர் கனகன் ஏரி அருகே மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ரேகா (36). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
இந்தநிலையில் எல்லைப்பிள்ளைசாவடியில் புதிதாக வீடு கட்டி வந்தார். தற்போது அந்த கட்டிடத்தில் டைல்ஸ் போடும் பணி நடப்பதால் அதற்கு தேவையான மணல் எடுப்பதற்காக தனக்கு சொந்தமான குடோனிற்கு நேற்று மதியம் 2.30 மணி அளவில் மினி லாரியில் சென்றுள்ளார்.
அங்கு அவர் மினிலாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் அவரை ஓட ஓட விரட்டி தள்ளினார்கள். இதில் துரை பரிதாபமாக உயிரிழந்தார். சொத்துப் பிரச்சினையில் உறவினர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications