புதுவையில் யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
சென்னை: தமிழகத்தில் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. பக்கத்து மாநிலமான புதுவையில் பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் என்.டி.ஏ கூட்டணியே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 9 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று பல்வேறு எக்ஸிட் போல் கணிப்புகள் வெளியான நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியை தக்க வைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சர்வேகளில் NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது. இந்தியா கூட்டணி 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என எக்ஸிட் போல் முடிவுகள் காட்டுகின்றன. அதே போல் விஜய்யின் தவெக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதையே எக்ஸிட் போல் முடிவுகள் காண்பிக்கின்றன. இந்த கட்சி அதிகபட்சமாக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக சில கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
People's Pulse கணிப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 16-19 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ்-திமுக கூட்டணி 10-12 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என கணித்துள்ளது. தவெகக்கு ஒரு இடம் கூட கிடைக்காது, மற்றவர்கள் 1-2 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளது.
Axis My India சர்வேவில், NDAக்கு 16-20 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு 6-8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், தவெக 2-4 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றவர்கள் 1-3 இடங்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Praja Poll கணிப்பில் NDA 19-25 இடங்கள் வரை வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ்-திமுக கூட்டணி 6-8 இடங்களும், தவெகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Poll of Polls கணிப்பில், NDA 17-21 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி 7-9 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தவெக 2-4 இடங்களில் வெற்றி பெறும் என்றும் மற்றவர்கள் 1-3 இடங்களில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் என்.டி.ஏ கூட்டணியே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ்
* என்.டிஏ - 16-19
* காங்கிரஸ் திமுக கூட்டணி - 10-12
* தவெக - 0
* மற்றவை - 1-2
ஆக்சிஸ் மை இந்தியா
* என்.டிஏ - 16-20
* காங்கிரஸ் திமுக கூட்டணி - 6-8
* தவெக - 2-4
* மற்றவை - 1-3
பிரஜா போல்
* என்.டிஏ - 19-25
* காங்கிரஸ் திமுக கூட்டணி - 06-08
* தவெக- 0
* மற்றவை - 0
ஜேவிசி போல்ஸ்:
* தேசிய ஜனநாயக கூட்டணி: 15-17
* காங்கிரஸ் திமுக ( இந்தியா கூட்டணி: 11-13
* தவெக:01-02
* மற்றவை: 01
போல் ஆஃப் போல்ஸ்
* என்டிஏ: 17-21
* காங்கிரஸ் - திமுக கூட்டணி: 7-9
* தவெக: 2-4
* மற்றவை: 1-3
ஜேவிசி போல்ஸ்:
* தேசிய ஜனநாயக கூட்டணி: 15-17
* காங்கிரஸ் திமுக (இந்தியா கூட்டணி): 11-13
* தவெக: 01-02
* மற்றவை: 01















Click it and Unblock the Notifications