புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஒரு எலுமிச்சம் பழம்.. "மொத்தமும்" இழந்த லட்சுமி.. கப்பலேறிய மானம்.. கி.வீரமணி அன்னைக்கே சொன்னாரே

ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தினால் பணத்தை ஏமாந்துள்ளார் லட்சுமி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஒரே ஒரு எலுமிச்சம்பழத்தால், பணத்தையும், மானத்தையும் இழந்து, கடைசியில் போலீஸ் வரை சென்றுள்ளார் ஒரு இளம்பெண்.. என்ன நடந்தது?!

சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தன்னுடைய பிரச்சாரத்தில் ஒரு முக்கிய சம்பவத்தை பற்றி சொன்னார்..

அடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்கஅடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்க

"புதுக்கோட்டையில் முத்துலட்சுமி என்ற பெண்ணின் வீட்டில் தொடர்ந்து உயிரிழப்பு.. அதனால், ஒரு சாமியாரிடம் குறி கேட்க சென்றார்..

 எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழம்

அந்த சாமியாரும், 10 ரூபாய் எலுமிச்சம் பழத்தைப் பறக்கவிட்டு புதையல் எடுத்துத் தருவதாக 81,000 ரூபாயைப் பறித்துச் சென்று விட்டார்.. மணி, முருகேசன், ராசு ஆகிய மூன்று போலிச் சாமியார்களைக் கைது செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 23 பித்தளை சிலைகள், ரூ.81,000 ரொக்கம், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.. சாமியார் பேச்சை கேட்டு, முத்துலட்சுமி, ஆங்காங்கே கடன் வாங்கி ரூ.75,000 கொடுத்து புதையலை எடுக்க சொல்லி, பூசைச் செலவுக்கும் ரூ.6,000 தந்து ஏமாந்தார்.

 தந்திரக்காரர்கள்

தந்திரக்காரர்கள்

அதாவது, "பக்தி, கடவுள், மதப் போர்வையில் இந்த மோசடிகளை காவி வேடமிட்ட பலரும் தந்திரக்காரர்களும் அதே விஞ்ஞான உத்திகளைக் கொண்டே மக்களை ஏமாற்றுவதற்கு மூலக் கருவியாகவும் பயன்படுத்துவது இன்னும் பல மடங்கு நம்மை வேதனையடையச் செய்கிறது,.. அறிவியல் சிந்தனை தேவைப் படும் சமூகநலப் பிரச்சினையாகப் பார்க்க 'மந்திரமல்ல; தந்திரமே' என்று விளக்கிடும் நிகழ்ச்சிகளும் விளக்கவுரைகளும், விழிப்புணர்வுக் கூட்டங்களும் நடத்துவதே உடனடியான மனநல சிகிச்சையும், தீர்வும் ஆகும் என்று அந்த கூட்டத்தில் விளக்கியிருந்தார்.

 எலக்ட்ரிசியன்

எலக்ட்ரிசியன்

மூத்த தலைவர் வீரமணி சொன்னதுபோலவே, இப்போதும் ஒரு சம்பவம் நடந்துவிட்டது.. முத்துலட்சுமி போன்றே லட்சுமி என்ற அப்பாவி பெண் சிக்கி கொண்டுள்ளார்.. புதுச்சேரி மாநிலம் கோரிமேடு இந்திரா நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு எலக்ட்ரீசியன்.. இவர் மனைவிதான் லட்சுமி.. 35 வயதாகிறது.. இவர்களுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 7ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு 2020ம் ஆண்டு சத்தியவதி என்ற 36 வயது பெண், இரண்டு மகள்களுடன் குடிவந்துள்ளார். அனைவருடன் நட்பாக பழகியுள்ளார்... முருகனின் அக்கா உமாமகேஸ்வரி தனது 16 வயதில் இறந்து விட்டார்... தனது அக்காவின் போட்டோவை முருகன் வீட்டில் வைத்திருந்தார்.

மந்திரம்

மந்திரம்

வீட்டில் சில பிரச்சினைகள் இருந்து வந்ததையறிந்த சத்யாவதியிடம் சென்று வலிய பேசியுள்ளார்.. "உங்கள் வீட்டில் தோஷம் இருக்கு.. இதனை போக்க அருள்வாக்கு சொல்லும் இடத்திற்கு அழைத்து செல்கிறேன்.. வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே இந்த தோஷத்தை கழிக்க வேண்டும். ஆண்களுக்கு தெரியக்கூடாது ' என்று சொல்லி, காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார்.. அங்கே ஒரு சாமியார் இருந்தார்.. அவரும் அருள்வாக்கை சொல்லி, ஒரு எலுமிச்சை பழத்தை லட்சுமியிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால், வீட்டை சுற்றி அத்தனை பிரச்சனைகள் இருக்கும்போது, அந்த ஒரே ஒரு எலுமிச்சம்பழத்தால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை..

எலுமிச்சம்

எலுமிச்சம்

உடனே, சத்யாவதி, தானே பரிகார பூஜை செய்வதாக கூறி லட்சுமியிடம் இருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்... இப்படியே ஏதாவது ஒரு பூஜை செலவு சொல்லி, அடிக்கடி லட்சுமியிடம் பணம் கேட்டு வந்தார்.. லட்சுமியால் ஒருகட்டத்தில் பணம் கொடுக்க முடியாத சூழல் வந்துள்ளது.. அதற்கு சத்யாவதி, "பணம் தராவிட்டால் உங்கள் பிள்ளைகள் இறந்துவிட வாய்ப்புள்ளது" என்று மிரட்டியிருக்கிறார்.. இதனால் லட்சுமியும் அவரது மாமியாரும் பல தவணை நேரடியாகவும், ரூ.20 லட்சம் ரொக்கபணம், 37 பவுன் நகைகளை தந்தார்களாம். அதுவும் கூகுள் பே மூலமாக தந்திருக்கிறார்கள்.

 சத்யாவதி

சத்யாவதி

வாங்கிய பணத்துக்கு பூஜை செய்வது போல நடித்துள்ளார் சத்யாவதி.. இந்த பூஜை உண்மை என்று நம்ப வேண்டும் என்பதற்காகவே, லட்சுமியின் மகளை பளாரென கன்னத்தில் அறைந்துள்ளார்.. அத்துடன் கம்பியை நெருப்பில் காய்ச்சி சூடு வைத்துள்ளார்.. அந்த குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது.. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, அதை பற்றி சத்யாவதி கேட்டுள்ளார்.. அதற்கு அவர், இதை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, அப்படி சொன்னால் பூஜை பலிக்காது என்று மிரட்டியுள்ளார்.

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

இதில் சோகம் என்னவென்றால், கடைசிவரை வரை லட்சுமி குடும்பத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதுதான்.. இதனால் அதிர்ந்து போன லட்சுமி இது குறித்து தன்வந்திரி நகர் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் சத்யவதி, புதுச்சேரி நைநார்மண்டபம் பகுதியில் உள்ள சொந்தக்காரர் வீட்டில் ஒளிந்து கொண்டார்.. இதையும் மோப்பம் பிடித்து வந்துவிட்ட போலீசார், தலைமறைவாக இருந்த சத்யவதியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. ஆக, பணத்தை கோடி கோடியாய் இழந்தாலும், உடம்பெல்லாம் நெருப்பால் வெந்தாலும், வெறும் "எலுமிச்சையால்" மந்திரம் பலித்திடுமா என்ன?!

English summary
why did puducherry lakshmi go to police station and what happened in her family
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X