'மாமன்னன்' வடிவேலுவை போல 'ஜாதி' அவமரியாதை.. புதுவை தலித் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா ராஜினாமா ஏன்?
புதுச்சேரி: மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கதாபாத்திரத்தை நாற்காலியில் உட்கார விடாமல் அவமானப்படுத்தப்படுகிற காட்சியை நிஜ வாழ்வில் அமைச்சராக சந்தித்தவர் தற்போது பதவியை ராஜினாமா செய்திருக்கும் புதுவை தலித் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா.
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசில் முதல்வர் ரெங்கசாமி அமைச்சரவையில் இடம்பிடித்தவர் நெடுங்காடு தொகுதியில் வென்ற சந்திர பிரியங்கா. 31 வயது இளம் பெண் அமைச்சர் என்ற அறிமுகத்துடன் அமைச்சரவையில் இணைத்து கொள்ளப்பட்டார் சந்திரபிரியங்கா. அவருக்கு போக்குவரத்து துறை இலாகா ஒதுக்கப்பட்டது. இவரது தந்தை சந்திரகாசு, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சராக இருந்தவர்.

டக்கால்டி மண்டையா: புதுச்சேரி அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகள், சுவாரசிய சம்பவங்கள் மூலம் செய்திகளில் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருந்தவர் சந்திரபிரியங்கா. கடந்த ஆண்டு குழந்தைகள் தினத்தில் நடந்து சென்ற மாணவர்களை காரில் ஏற்றிக் கொண்டு அவர்களை பாட சொன்னார் அமைச்சர் சந்திரபிரியங்கா. ஆனால் அந்த மாணவர்கள் வெட்கப்பட, டேய் டக்கால்டி மண்டையா.. நான் வெட்கப்பட வேண்டியதெல்லாம் நீங்க வெட்கப்படுறீங்கடா என கிண்டலடித்தார். இதை அப்படியே செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு பேசு பொருளானார் அமைச்சர் சந்திரபிரியங்கா.

அம்மனாக மாறிய சந்திரபிரியங்கா: புதுச்சேரியில் இலவச வேட்டி சேலைக்குப் பதில் ரூ500 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்து பரபரப்பையும் சந்திரபிரியங்கா கிளப்பி இருந்தார். சாலையோர கலை நிகழ்ச்சில் பங்கேற்று குதிரை வண்டி ஓட்டியது, வளைகாப்பு நிகழ்ச்சியில் அசத்தலான டான்ஸ் ஆடியது, உச்சகட்டமாக அம்மனைப் போல வேஷம் போட்டது என ஏகத்துக்கும் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்தவர்தான் சந்திரபிரியங்கா.
'மாமன்னன்' போல அவமரியாதை: இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் புதுச்சேரி வருகை தந்தார். அப்போது முதல்வர் ரெங்கசாமியை செந்தில் தொண்டமான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முதல்வர் ரெங்கசாமி அருகே நின்று கொண்டே இருந்தார் சந்திரபிரியங்கா. வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பில் மாநில அமைச்சர் ஒருவருக்கு முதல்வர் அறையிலேயே நாற்காலி ஒதுக்கப்படாத அந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மாமன்னன் திரைப்படத்தில் என்னதான் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் நடிகர் வடிவேலு கதாபாத்திரத்தை ஜாதிவெறி கும்பல் நாற்காலியில் உட்காரவிடாது; வடிவேலுவை அவர் மகன் உதயநிதி கதாபாத்திரம் உட்கார வைப்பதுதான் படத்தின் மைய பிரச்சனையாக சொல்லப்பட்டிருந்தது. அதேபோன்ற ஒடுக்குமுறையை சந்திரபிரியங்கா கண்முன்னே எதிர்கொண்டது கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டது.
ஜாதிய பாகுபாடு: இந்த பின்னணியில் தற்போது அமைச்சர் பதவியை சந்திரபிரியங்கா ராஜினாமா செய்துள்ளார். அவர தமது ராஜினாமா கடிதத்தில், ஜாதியபாகுபாடு காரணமாக பதவி விலகியதாக தெரிவித்துள்ளார். தாம் ஒரு தலித் பெண் என்பதால் பலருக்கு உறுத்தலாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார் சந்திரபிரியங்கா. இன்னும் அரசியலில் எத்தனை மாமன்னன்களோ?
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications