புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பெரிய சட்டை" ரங்கசாமி.. ஏனாமில் மயிரிழையில் தோற்று.. தட்டாஞ்சாவடியில் தப்பி கரை ஏறினார்!

புதுச்சேரியில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் 28 வயது சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். அதே நேரம் தட்டாஞ்சாவடி தொகுதியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளார் ரங்கசாமி. அதே நேரத்தில் தட்டாஞ்சாவடியில் சிபிஐ வேட்பாளர் சேதுவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார் ரங்கசாமி.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஒருபுறமும், காங்கிரஸ் கூட்டணி ஒரு புறமும் தேர்தலை சந்தித்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலில் தொடக்கம் முதலே என் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.

Yanam Election Result 2021: NR Congress leader Rangasamy who lost to the Independent

ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். ஏனாம் தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி, தம்மை எதிர்த்து களம் கண்ட 28 வயது சுயேட்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கிடம் தோல்வியடைந்தார்.

இறுதி சுற்றான 15வது சுற்று முடிவில் ரங்கசாமி 16,228 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்லபள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் 16,874 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

655 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் ரங்கசாமியை வீழ்த்தி இருக்கிறார். ஏனாம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த மல்லாடி கிருஷ்ணா ராவ் காங்கிரசில் விலகி ரங்கசாமியை போட்டியிடுமாறு வலியுறுத்தி இருந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே அதிரடியை ஆரம்பித்த மம்தா.. ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார்வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே அதிரடியை ஆரம்பித்த மம்தா.. ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார்

ஏனாம் தொகுதியில் ரங்கசாமி, சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்தது என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தட்டாஞ்சாவடியில் சிபிஐ வேட்பாளர் சேதுவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார் ரங்கசாமி.

என்ஆர் காங்கிரஸ் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் விரைவில் முதல்வராக பதவியேற்பார் ரங்கசாமி.

English summary
Yanam Election Result 2021: NR Congress leader Rangasamy, who contested from Yanam constituency in Pondicherry, lost to an independent candidate Gollapalli Srinivas Ashok.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X