புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ள பாதிப்பு.. மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 5000 நிவாரண நிதி.. புதுவை முதல்வர் ரங்கசாமி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே நிவாரண நிதியாக ரூ 5000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 5000 வழங்கப்படும் எனப் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பலவராக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழக மாவட்டங்களிலும் புதுவையிலும் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

சூப்பர்!19 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லைசூப்பர்!19 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை

இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும், புதுவையிலும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வெள்ளப்பாதிப்பு

வெள்ளப்பாதிப்பு

இதனிடையே புதுச்சேரியில் மழை, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் புதுவே சென்றனர். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முன் புதுச்சேரி தலைமைச் செயலகம் வந்த அக்குழுவினர், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுடன் புதுவையில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Array

Array


அதன் பின்னர் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மத்திய குழுவினர், நாளை காலை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

 இடைக்கால நிவாரண நிதி

இடைக்கால நிவாரண நிதி

மத்திய குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 7 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டது. மேலும், பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழை சேதம் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளேன். இடைக்கால நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ 300 கோடி கேட்டுள்ளோம்.

 மஞ்சள் குடும்ப அட்டைதாரர்கள்

மஞ்சள் குடும்ப அட்டைதாரர்கள்

மத்திய குழுவினர் ஆய்வு செய்த பின்பு மேலும் நிவாரணம் கேட்கப்படும். இதேபோன்று மழையால் பாதிக்கப்பட்ட சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ரூ 5000 நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Puducherry yellow family cardholders also get flood relief amounts. Puducherry flood latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X