Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 நாட்களில் 8 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 8 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, நேற்று முன்தினம் திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, நடுக்கடலில் படகு சேதமடைந்தது. இதனால், கடலில் தவித்த அவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

4 More Pudukottai Fishermens Arrested; Sri Lankan Navy is Again Atrocious

இந்நிலையில், கோட்டைப் பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து, அவர்களை வரும் 10 ந் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+