எய்ம்ஸ் செங்கல்லை திருடிட்டாரு.. உதயநிதியை கைது பண்ணுங்க முதல்ல.. போலீஸில் புகார் அளித்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    BJP-யிடம் ADMK இருப்பது போல இல்லாமல் மணமக்கள் வாழ வேண்டும் - உதயநிதி கலகல *Politics

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சென்றுள்ளார்.

    அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் இல்லத் திருமண விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார்.

    உதயநிதி

    உதயநிதி

    அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மணமக்கள் இருவரும் தங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாழ வேண்டும். பாரதிய ஜனதா கட்சியிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல் இருக்கக்கூடாது என்றார். மேலும், அந்த நிகழ்ச்சியில், எய்ம்ஸ் செங்கல்லைப் போல் ஒரு நினைவுப்பரிசு உதயநிதிக்கு வழங்கப்பட்டது. இந்த நினைவுப்பரிசைப் பார்த்ததும் உதயநிதி வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.

     நினைவுப்பரிசு

    நினைவுப்பரிசு

    இதனிடையே உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டையில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக வைத்திருந்த செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் திருடிக் கொண்டு சென்று விட்டதாகக் கூறி இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

     புகார் மனு

    புகார் மனு

    இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர். நேற்று நடந்த சம்பவம் மூலமாக உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு வைத்திருந்த செங்கல்லைக் கொண்டு வந்தது உறுதியாகி உள்ளது என்றும் இதன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல்

    தேர்தல்

    முன்னதாக கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் மதுரைக்குப் பிரசாரத்திற்குச் சென்ற உதயநிதி, "மத்திய அரசு கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை நான் கையோடு கொண்டு வந்துள்ளேன்" என்று கூறி ஒற்றை செங்கல்லை எடுத்துக் காட்டி இருந்தார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்தச் சம்பவம் பிரசாரம் சமயத்திலேயே பேசுபொருள் ஆனது. இந்தச் சூழலில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப் பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+