அண்ணாமலை ரொம்ப பாவம்.. தியானம் செய்ய வேண்டும்.. திருநாவுக்கரசர் சொன்ன அட்வைஸ்!
அண்ணாமலை தியானம் செய்ய வேண்டும் என்று திருநாவுக்கரசர் அறிவுரை கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலை பாவம் என்றும், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் தியானம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள குளங்களில் தாமரை மலர்வதாக கூறிய திருநாவுக்கரசர், ஆட்சியில் தாமரை மலர்வதாக தெரியவில்லை என்று கிண்டல் செய்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியது பேசுபொருளாக உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது திருநாவுக்கரசரிடம் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் அனுப்பியது பற்றிய கேள்விக்கு, ஆளுநர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது.

திருநாவுக்கரசர் பேட்டி
ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் தற்கொலை செய்து கொள்வதாலும் இளைஞர்கள் எதிர்காலத்தை கெடுப்பதாலும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு தான் தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றியது. அதை ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் 150 நாட்கள் கிடப்பில் போடப்பட்டு இப்போதுதான் அவருக்கு தெரிய வந்ததைப் போல, ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி திருப்பி அனுப்புவதற்கு நான்கு மாதங்களை எடுத்துக் கொள்வதா?

ஆளுநருக்கு கேள்வி
ஏன் நான்கு மாதம் ஐந்து மாதத்திற்கு ஒரு முறை தான் ஆளுநர் கோப்பு பார்ப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இது வேண்டும் என்றே செய்கின்ற காலதாமதம். மாநில அரசுக்கு புறம்பாக செயல்படுகிறார் என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு அரசை தேர்ந்தெடுத்த மக்கள் நலனுக்கு எதிராகவும் செயல்படுகிறார். இது கண்டனத்துக்குரியது. இதை தவிர்க்க வேண்டியது ஆளுநர் உடைய பொறுப்பு.

கண்டனம்
சட்டம் ஏற்றுவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதனால் தான் அரசு சட்டம் ஏற்றி அனுப்பப்படுகிறது. அதைத் தெரிவிக்க கூட ஆளுநர் 6 மாதங்கள் எடுத்துக் கொள்வதா? ஆளுநர் சில விவகாரங்களில் விதிகளுக்கு புறம்பாகவும், ஜனநாயக மரபுகளுக்கு முரணாகவும் நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.

திருநாவுக்கரசர் அட்வைஸ்
தொடர்ந்து அண்ணாமலை பற்றிய கேள்விக்கு, பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பொறுப்புடன் பேச வேண்டும். சட்டத்தை மீறுவதோ, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. முடிந்தால் கைது செய்து பார், தொட்டுப்பார் என்று வெட்டி சவால் விடுவது எந்த வகையில் நியாயம்? இதுபோல் மாநிலத்தில் ஆட்சி செய்யக்கூடியவர்கள் முடிந்தால் மத்திய அரசை கைது செய்து பார்? என்று கேட்பதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும். ஜனநாயகத்திற்கு புறம்பான சண்டித்தனமான பேச்சுக்கள் இது.

சண்டியர் போல் பேசக் கூடாது
ஜனநாயகத்திற்கு உரிய பேச்சுகள் இல்லை. சண்டியர் மாதிரி அண்ணாமலை பேசக்கூடாது. கட்சியின் தலைவர் போல பேச வேண்டுமே தவிர இது போன்ற பேச்சுக்களை அவர் தவிர்ப்பது அவரது கட்சிக்கும் அவருக்கும் நல்லது. ஒருவேளை அவரை பிடித்து சிறையில் அடைத்தால் கம்பியை உடைத்துக் கொண்டு வருவாரா? அவர் மீது வழக்கு எந்த செக்ஷனில் போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை பிணையில் விடுவிக்க கூடிய பிரிவில் போட்டு இருப்பதால் இது போன்ற பேச்சுகளை பேசுகிறாரா என்றும் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

குளங்களில் தாமரை மலர்கிறது
தொடர்ந்து ஜேபி நட்டா விரைவில் தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று பேசியது பற்றிய கேள்விக்கு, தமிழ்நாட்டில் தாமரை மலரும் மலரும் என்று அவர்களும் சொல்லிக் கொண்டுதான் உள்ளனர். தாமரை நிறைய குளங்களில் மலர்ந்து கொண்டு தான் உள்ளது. வீட்டிலேயோ மற்ற இடங்களிலோ ஆட்சியில் மலர்வதைப் போல் தெரியவில்லை என்று கூறினார்.

அண்ணாமலை பாவம்
பின்னர் ஜெயலலிதாவுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசியது பற்றிய கேள்விக்கு, நான் ஜெயலலிதா போல் கருணாநிதி போல் என்று பேசி வருகிறார். அவர் பாவம். மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். தியானத்தில் ஈடுபட வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்று பேசிக்கொண்டு வந்தால் அவருக்கு முத்திவிடும். பிறகு அவர் மோடி, அமித்ஷா, வாஜ்பாய் மாதிரி நான் என்று கூறி விடப் போகிறார் என்று தெரிவித்தார்.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications