ஹபீபி கம் டூ துபாய்! பறக்கத் தயாராகும் அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்! கூட யாருன்னு பாருங்க!
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர், தனிப்பட்ட முறையில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துபாய் செல்லவுள்ளார்.
எப்போதுமே பரபரப்பாக விஜயபாஸ்கர்: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக ஊடக வெளிச்சம் பட்டது சி.விஜயபாஸ்கர் மீது தான். அந்தளவுக்கு மனிதர் பரபரப்பாக பேட்டிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என எப்போதுமே பிசியாக வலம் வந்தார். குறிப்பாக கொரோனா காலத்தில் 10 முதல் 15 நாட்கள் வீட்டிற்கே செல்லாமல் பம்பரமாக சுழன்றார் சி.விஜயபாஸ்கர். இதனிடையே குட்கா வழக்கில் மட்டும் விஜயபாஸ்கர் பெயர் சிக்காமல் இருந்திருந்தால் அரசியலில் இந்நேரம் வேற லெவலை தொட்டிருப்பார்.

குட்கா வழக்கில் சிக்கி: ஆனால் அவரது போதாத காலம் குட்கா வழக்கில் சிக்கி விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். இருப்பினும் சட்டப்போராட்டம் மூலம் அதனை எதிர்கொள்வது என முடிவெடுத்து எப்போதும் போலவே ஆக்டிவாக இயங்கி வருகிறார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டு பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு கவனித்ததுடன் தனது பங்காக செலவிலும் தாராளம் காட்டினார். இந்நிலையில் இவர் துபாய் செல்லவிருப்பது தான் இப்போதைய புதிய தகவல்.
எதற்காக துபாய் பயணம்?: சி.விஜயபாஸ்கர் துபாய் பயணம் என்றவுடன் அவர் அங்கே ஓய்வை கழிக்கச் செல்கிறாரா, பொழுதுப்போக்கிற்கு செல்கிறாரா என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ண அலைகள் எழலாம். ஆனால் அவர் துபாய் செல்வதன் நோக்கம் என்னவென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரேடியோ கில்லி எஃப்.எம். நடத்தும் ''வாய்ஸ் ஆஃப் எமிரேட்ஸ்'' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுவதற்கு தான். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மட்டும் இதில் கலந்துகொள்வதற்காக துபாய் செல்லவில்லை. அவருடன் இசையமைப்பாளர் இமானும் இந்த ''வாய்ஸ் ஆஃப் எமிரேட்ஸ்'' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் செல்கிறார்.
நிகழ்ச்சி விவரம்: நவம்பர் 5ஆம் தேதி மாலை துபாய் நாத் அல்ஷிபா பகுதியில் உள்ள ஜெம்ஸ் மாடர்ன் அகாடமி ஆடிட்டோரியத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications