விராலிமலையில் ஐடிசி தொழிற்சாலை... 2,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் பேச்சு..!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஐடிசி ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் விராலிமலை சென்றார்.

அங்கு ரூ.100 கோடி மதிப்பில் 55 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஐடிசி தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் அந்த தொழிற்சாலை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார். தொழில்மயமான மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நிறுவப்பட்டிருந்த சீறி வரும் ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டம் புதுக்கோட்டை என்றும் விராலிமலை வீரமிக்க மண் எனவும் புகழாரம் சூட்டினார்.
முன்னதாக காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் கவிநாடு கண்மாயை நேரில் ஆய்வு செய்த அவர் காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை கொடுத்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புதுக்கோட்டை சென்ற முதல்வர், அங்கு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கேத் லேப் வசதியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிகிறார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications