போதை பொருள் ஒழிப்போம்..குறும்படம் வெளியிட்ட கல்லூரி மாணவர்கள்..சுதந்திர தினத்தில் பாராட்டு சான்றிதழ்
புதுக்கோட்டை: இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தின விழா பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் ஏற்பாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காமராஜ் நகரில் நடைபெற்ற 76வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கதின் தலைவர் ஸ்ரீபிரசன்னா சரவணன் தலைமையில் மாநில பேச்சாளர் கவிஞர் பெர்னாட்ஷா முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் வீரர்கள் அணிவகுப்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.

மேலும் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் " போதை பொருள் ஒழிப்போம்" குறும்படம் வெளியிட்ட நாட்டுக்கல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சரவணன், அபினேஷ், கோபால கிருஷ்ணன் ஆகிய மூவரையும் பாராட்டி பாராட்டு நற்சான்றிதழை தீயணைப்பு அதிகாரி சந்தானம்,கவிஞர் பெர்னாட்ஷா வழங்கினர்.
மாணவ மாணவிகளுக்கு நோட், பேனா,பென்சில், ரப்பர், ஸ்கேல் உள்ளிட்டவைகளை தீயணைப்பு துறை வீரர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய வீரர்களின் செயலை வெகுவாகப் பாராட்டி டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் பாராட்டு நற்சான்றிதழை கவிஞர் பெர்னாட்ஷா வழங்கி சிறப்பித்தார்.
இதில் பொது மக்கள், அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கதினர் என பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications