Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடகாட்டில் கொளுத்தப்பட்ட குடிசைகள்.. இதுதான் உண்மையா! போலீசுக்கு எப்படி தெரியும்? திருமாவளவன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் பட்டியலின மக்களின் குடியிருப்பு எரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு நடந்த வன்முறையில் பலர் காயமடைந்திருக்கிறார்கள். ஆனால் இதற்கான காரணமாக காவல்துறை வெளியிட்ட அறிக்கை முழுமையானது கிடையாது என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருக்கிறார்.

திருவிழா தேரை தொட்டு வணங்கியதற்காகவே பட்டியலின மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று திருமாவளன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Pudukkottai Dalit Thirumavalavan

வடகாட்டில் நடந்த வன்முறையில், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள் எரிக்கப்படும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன. வழிபாட்டு உரிமை தடைசெய்யப்படுவதை ஒட்டித்தான், ஒரு தீண்டாமைக் கொடுமையின் வெளிப்பாடாக இந்த வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால், தனிப்பட்டதாக இருவருக்கும் இடையில் நடந்த மோதலால்தான் குடிசைகள் எரிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. அதாவது "பெட்ரோல் பங்கில் யார் முதலில் பெட்ரோல் போடுவது என்று இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் இந்த மோதலுக்கு காரணம். மோதலில் ஒரு குடிசை வீடு எரிக்கப்பட்டிருக்கிறது. அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கிறது. குடிபோதையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இது. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை செய்து வருகிறோம்.

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகறாரில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்கிற வதந்தியை நம்ப வேண்டாம். அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தது.

இதனை கண்டித்திருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி, "காவல்துறை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது" என்று விமர்சித்திருந்தது. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,

"வடகாடு கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிற சூழலில் நூற்றுக்கணக்கான ஆதிதிராவிட மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. கார், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. 12 பேர் மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றிருக்கிறது. இந்த கோயில் திருவிழாவின்போது தேர் வடத்தை பிடித்து இழுத்து ஆதிதிராவிடர்கள் திருவிழாவை, தேரோட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு காலங்காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் நேற்று தேர் வடம் பிடித்து இழுத்த போது சாதி பெயரை சொல்லி சிலர் ஆதிதிராவிட மக்களை திட்டி இருக்கிறார்கள். மட்டுமல்லாது அவர்களின் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை காவல்துறை, புலனாய்வு நடைபெறுவதற்கு முன்னராகவே இந்த சம்பவத்திற்கான காரணம் பெட்ரோல் பங்கில் நடந்த தகராறுதான் என்று கூறியிருக்கிறது.

ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அது குறித்து புலனாய்வு செய்யப்பட்டு பின்னர் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால் முன்கூட்டியே காரணத்தை சொல்வதென்பது புலனாய்வு விசாரணையை திசை திருப்பக்கூடும். புதுக்கோட்டை காவல்துறை அதுதான் செய்திருக்கிறது. ஒருவேளை காவல்துறை சொல்லிய காரணம் உண்மையாக இருந்தாலுமே கூட, புலனாய்வுக்கு முன்னதாக போலீஸ் பிரச்சனைக்கான காரணத்தை சொல்லக்கூடாது என்பது விதி.

ரத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை முயன்று வருகிறது. இதை கைவிட வேண்டும். பிரச்சனைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+