விஜயபாஸ்கர் வழக்கில் EDக்கு ஆவணங்களை தர முடியாது.. நோட்ஸ் எடுத்துக்கங்க.. லஞ்ச ஒழிப்புத்துறை வாதம்!
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமலாக்கத்துறைக்கு ஆவணங்களை வழங்க லஞ்ச ஒழிப்புத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது.

அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 216 பக்க குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தனர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது சில முறை விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் ஆஜராகி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் 14வது முறையாக புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
இன்று வழக்கு விசாரணையின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராகி உள்ளனர். விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளதால் புதுக்கோட்டையில் பரபரப்பு நிலவி வருகிறது.
இன்று வழக்கு விசாரணையின்போது, விஜயபாஸ்கருக்கு எதிராக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தியுள்ள நிலையில், அமலாக்கத்துறை தரப்பில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் தருமாறு கோரப்பட்டது.
விஜயபாஸ்கர் வழக்கில் அமலாக்கத்துறைக்கு அனைத்து ஆவணங்களையும் வழங்க முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை வாதம் வைத்தது. தேவையெனில் முக்கிய ஆவண நகல்களை குறிப்பு எடுத்து தர தயாராக உள்ளோம் என லஞ்ச ஒழிப்புத்துறை புதுக்கோட்டை கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
ஆனால், தங்களுக்கு அனைத்து ஆவணங்களும் வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதியாக கூறினார். அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை படித்துப் பார்த்துக்கொள்ள அனுமதி உண்டு, குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து இரு தரப்பும் வாதங்களை முன் வைத்த நிலையில், விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்து புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி!












Click it and Unblock the Notifications