“கிரிக்கெட்டில் சச்சின்.. அரசியலில் திமுக.. எப்பவும் நாமதான் OG".. ஸ்டாலின் பிரச்சாரம்!
புதுக்கோட்டை: "கிரிக்கெட்டில் சச்சின் கிட்டதான் எல்லா ரெக்கார்டும் இருக்கும். அரசியலில் அப்படி முறியடிக்க முடியாத ரெக்கார்ட் அனைத்தும் திமுகதான் செஞ்சிருக்கு.. இனியும் நாமதான் ரெக்கார்ட் பிரேக் பண்ணுவோம்." என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 176 வேட்பாளர்கள் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நாள் நெருங்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "கிரிக்கெட்டில் சச்சின் கிட்டதான் எல்லா ரெக்கார்டும் இருக்கும். அரசியலில் அப்படி முறியடிக்க முடியாத ரெக்கார்ட் அனைத்தும் திமுகதான் செஞ்சிருக்கு.. இனியும் நாமதான் ரெக்கார்ட் பிரேக் பண்ணுவோம்.
"நமது திட்டங்களைப் பார்த்துதான் மத்திய அரசே COPY அடித்துக்கொண்டு
இருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில்
திமுகதான் OG! ரூ.8,000 கூப்பன் வெச்சி மகளிர் தங்களுக்கு தேவைப்படும் பொருளை வாங்கிக்கலாம். உங்களுக்குப் பிடித்த பொருளை உங்களுக்குப் பிடித்த பிராண்ட்ல வாங்கிக்கோங்க.. உங்க இஷ்டம் உங்க சாய்ஸ்தான். வீட்டுக்காரர் கிட்ட எல்லாம் கேக்காதீங்க. ஏதாவது கேட்டு முறைச்சாங்கன்னா. அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லுங்க.
மக்களுக்காக உழைக்கும் இந்த ஸ்டாலின் கொரோனாவில் போயிருக்க வேண்டும் என வன்மத்தோடு எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே.. இந்த ஸ்டாலின் இன்னும் ஏராளமான திட்டங்களை செய்யப் போகிறேன்; நீங்களும் அதை பார்க்கத்தான் போகிறீர்கள்" எனப் பேசியுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications