செம போதை.. எங்க படுக்கிறதுன்னே தெரியாம.. பஸ் சக்கரத்துக்கு கீழே போய் படுத்த மகராசன்!
குடிபோதையில் பஸ் சக்கரத்தில் தலை வைத்து தூங்கியுள்ளார் நபர் ஒருவர்
Recommended Video
புதுக்கோட்டை: போதையில் தள்ளாடியே வந்த வந்த மகராசனுக்கு எங்க படுக்கிறதுன்னே தெரியாம.. பஸ் சக்கரத்துல போய் தலை வெச்சு படுத்து தூங்க ஆரம்பிச்சிட்டார்!
அறந்தாங்கியை சேர்ந்த ஒரு குடிமகன் ராத்திரியெல்லாம் குடித்தார்.. கிட்டத்தட்ட 3 மணி வரை தண்ணி அடித்தார்.. அதற்கு பிறகு அறந்தாங்கி பஸ் ஸ்டாண்ட் வந்தார்.. அங்கு அந்த நேரத்தில் யாருமே இல்லை.. தனியாக நின்று கொண்டு சத்தம் போட்டு, ரகளை செய்து கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் கத்தி, கத்தி டயர்ட் ஆகிவிட்டார்.. மண்டை நிறைய போதை ஏறவும், அப்படியே எங்காவது படுக்க நினைத்தார்.. அங்கு நின்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ்ஸின் பின்பக்க சக்கரத்தில் தலையை வைத்து படுத்து தூங்கிவிட்டார்.
கொஞ்ச நேரத்தில் பஸ் கிளப்ப நேரம் ஆகிவிட்டதால், டிரைவர் அங்கு வந்து சீட்டில் ஏறி உட்கார்ந்தார். எதேச்சையாக கண்ணாடியில் பார்க்கும்போதுதான், சக்கரத்தில் ஒருவர் தலைவைத்து படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பஸ்சில் இருந்து கீழே இறங்கி, அவரை எழுப்ப முயன்றார். ஆனால், போதை, தூக்கத்திலும், டிரைவரிடம் அந்த ஆசாமி தகராறு செய்தார்.
உடனே பொதுக்கள், பஸ் ஸ்டேண்ட்டில் இருந்த பயணிகள் அனைவரும் சேர்ந்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து, குடிமகனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன்பிறகு டிரைவர் பஸ்ஸை எடுக்க போனார்.
ஆனால், எல்லாரையும் மீறி திரும்பவும் அந்த குடிமகன் ஓடிவந்து, அதே பஸ்ஸின், அதே பின் சக்கரத்தின் கீழ் தனது கையை வைத்துக்கொண்டார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு கணம் பயணிகள் திகைத்துவிட்டனர். இதன்பிறகுதான் போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கி கொண்டு போனார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications