ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை: அமைச்சர் பேட்டி! எகிறி அடிக்கும் திமுக
புதுக்கோட்டை: ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம், ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை மீண்டும் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ளது. முன்னதாக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆளுநர்களுக்கு சட்டசபை மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கிடையாது. 3 ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்து கொண்டு என்ன செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 2020ஆம் ஆண்டு முதல் 180 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டார் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு வரும் வரை மாநில ஆளுநர்கள் ஒப்புதல் தராதது ஏன்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி 18ஆம் தேதி தினம் பிற்பகல் 3 மணிக்கே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அண்மையில் அனுப்பப்பட்ட 5 மசோதாக்களையும் ஆளுநர் ரவி நிலுவையில் வைத்துள்ளார். இத்தனை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டேன் என்று கூறிவிட்டு எஞ்சிய மசோதாக்களை நிலுவையில் வைப்பது அழகல்ல.

சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம், ஆளுநர் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உதவியாக இருக்கும். தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம். ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, "முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பிவி ரமணா ஆகியோர் மீதான விசாரணைக்கு அனுமதி தந்ததை ஆளுநர் அன்றே தெரியப்படுத்தி இருக்கலாம். குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் தந்ததை சிபிஐ-க்கு தெரிவிப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications