“சூப்பர்”.. மசூதிக்கு இந்து, கிறிஸ்தவர்கள் சீர்வரிசை! டெல்லி செங்கோட்டைக்கே பாடமெடுத்த புதுக்கோட்டை

இஸ்லாமியர்களும் இந்து மக்களும் மாமன் மச்சான் என்று உறவு முறை வைத்து அழைப்பது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதிய பள்ளிவாசல் கட்டிட திறப்பு விழாவுக்கு மத பாகுபாடுகளை கடந்து கோயில் இருந்து இந்துக்களும், தேவாலயத்தில் இருந்து கிறிஸ்தவர்களும் சீர்வரிசை பொருட்களை சுமந்து வந்தது புதுக்கோட்டையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் முன்பை விட தற்போது மதத்தை வைத்து அரசியல் செய்வதும், அவர்களின் தூண்டுதலால் ஜாதி மத அடிப்படையில் தாக்கிக்கொள்வதும் தொடர் கதையாகி வருகின்றன.

வட இந்திய மாநிலங்களில் இஸ்லாமியர்கள், தலித்துகளுக்கு எதிரான கும்பல் படுகொலைகள் தொடர்ந்து வருகின்றனர். பசுக்களை கடத்தியதாக கூறி இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்படும் கொடூர சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.

மத நல்லிணக்க மண்

மத நல்லிணக்க மண்

இந்த வெறுப்பு விஷம் கர்நாடகா வரை பரவி மத ரீதியான வன்முறைகள் தலைவிரித்து ஆடத் தொடங்கி இருக்கும் நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளன. தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில சலசலப்புகள் ஏற்பட்டாலும் சாமானிய மக்களிடம் மத ரீதியிலான வன்முறைகள் ஏற்படுவது இல்லை.

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

அந்த அளவுக்கு மக்கள் இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களிலும் மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

மாமன் மச்சான் உறவு

மாமன் மச்சான் உறவு

இப்பகுதிகளில் வசித்து வரும் இஸ்லாமியர்களும் இந்து மக்களும் மாமன் மச்சான் என்று உறவு முறை வைத்து அழைப்பது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. தங்களின் மத பண்டிகை காலங்களில் மதம் கடந்து அனைவரும் ஒன்றாக உணவு, பரிசு, வாழ்த்துக்களை பரிமாறும் மக்கள், கோயில், தேவாலய திருவிழாக்கள், மசூதியில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளில் மதம் கடந்து கலந்துகொள்கிறார்கள்.

புதிய பள்ளிவாசல் கட்டிடம்

புதிய பள்ளிவாசல் கட்டிடம்

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை காமராஜபுரத்தில் அமைந்திருந்த பழமையான முஹம்மது இப்ராஹிம் என்ற பள்ளிவாசல் இருந்த இடத்தில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையோடு கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்து, கிறிஸ்தவர்கள் சீர்வரிசை

இந்து, கிறிஸ்தவர்கள் சீர்வரிசை

குறிப்பாக இந்து மக்கள் கோயிலில் இருந்தும் கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் இருந்தும் சீர் வரிசைகளை புதிய மசூதிக்கு கொண்டு வந்தனர். அதனை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து மசூதியின் புதிய கட்டிடத்தை தொழுகைக்காக அர்ப்பணித்தனர். இந்த புகைப்படங்களை திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

திமுக எம்பி நெகிழ்ச்சி

திமுக எம்பி நெகிழ்ச்சி

அதில், "எங்கள் ஊரில் திருவப்பூர் முத்துமாரியம்மன் பூச்சொரிதல் நார்த்தாமலை தேர் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் இஸ்லாமியர்கள் தண்ணீர் பந்தல் அமைப்பதும் அன்னதானம் அளிப்பதும் நூற்றாண்டுகளாய் நடக்கும் சாதாரண விசயம்! இது செங்கோட்டைக்கே பாடம் எடுக்கும் புதுக்கோட்டை!!" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

முஸ்லிம்கள் சீர்வரிசை

முஸ்லிம்கள் சீர்வரிசை

கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்து அமைந்து இருக்கும் நெடுவாசல் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 2 கிராமங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அந்த விழாவிற்காக சீர் கொண்டு வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+