புதுக்கோட்டை அருகே விளையாடும் போதே சரிந்து விழுந்த கபடி வீரர்.. களத்திலேயே பிரிந்த உயிர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது, களத்திலேயே சரிந்து விழுந்த கபடி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். இது கபடி வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு அருகே உள்ள கிராமம் மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் . இவருக்கு 48 வயது ஆகிறது. இவருடைய மனைவி தமிழரசி. இவருக்கு 41 வயது ஆகிறது. இவர்களுக்கு யோகேஸ்வரன் ( 20), சிவா (18) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் யோகேஸ்வரன் கபடி வீரரான யோகேஸ்வர் ஆவார். இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.

அடிக்கடி கபடி பந்தயங்களில் கலந்து யோகேஸ்வரன் விளையாடியும் வந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை அன்னவாசல் அருகே மாங்குடி பகுதியில் நேற்று (டிசம்பர் 24) கபடி போட்டி நடந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வழக்கம் போல் உற்சாகத்துடன் கபடி போட்டியில் யோகேஸ்வரன் கலந்து கொண்டு விளையாடியிருக்கிறார்.
போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த யோகேஸ்வரன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக கபடி வீரர்கள் உடனடியாக யோகேஸ்வரனை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு யோகேஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கபடி போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தகவல் அறிந்து சென்ற அன்னவாசல் போலீசார் யோகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மைதானத்தில் கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே போன்ற சம்பவம் கரூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது,. கரூர் மாவட்டம், குளித்தலை கனகப்பிள்ளையார் மைதானத்தில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டியில் விளையாடிய 26 வயது கபடி வீரர் மைதானத்தியே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கச்சக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டி.மாணிக்கம் என்ற கபடி வீரர் மாணிக்கம் விளையாடி விட்டு, மைதானத்தில் நின்று கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அப்போது தெரிவித்தனர். இந்த துயர சம்பவங்கள் கபடி வீரர்களுக்கு அடிக்கடி நடந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications