"திருப்தி" இல்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சு.. முதல்வர் அவரை விசாரிக்கணும்! கார்த்தி சிதம்பரம் பரபர
புதுக்கோட்டை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், பல்வேறு விஷயங்கள் குறித்தும் சில பரபர கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் காசி தமிழ்ச் சங்கமம் குறித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், அதிமுக உட்கட்சி மோதல் குறித்தும் அவர் பேசினார்.

கார்த்தி சிதம்பரம்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்துவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இதை வைத்து பாஜக வளர வேண்டும் நினைத்தால் அது நடக்காது. தமிழகத்திற்கும் தமிழுக்கும் காசிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தாலும் இதை வைத்து பாஜக அரசியல் ரீதியாக வளரலாம் என்று நினைத்தால் அது நடப்பதற்கு வாய்ப்பில்லை. இதை விளம்பரமாகத் தான் செய்ய முடியுமே தவிர மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது

பதவி கொடுத்தால்..
கால்பந்து வீராங்கனை இறப்பு தொடர்பாக மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாமே தவிர அவர்கள் மீது காவல்துறை கிரிமினல் வழக்கு தொடர்வது ஏற்புடையது அல்ல.. கிரிமினல் வழக்கு தொடர்ந்தால் எந்த மருத்துவரும் பொதுமக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குத் தயங்குவார்கள்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி என்பது நியமன பதவி தான்.. தேர்தல் வைத்து தலைவர் தேர்ந்தெடுப்பது கிடையாது.. காங்கிரஸ் தலைவர் பதவியை தன்னிடம் கொடுத்தாள் சிறப்பாகச் செயல்படுவதற்குத் தயாராக உள்ளேன்

விசாரிக்க வேண்டும்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் என்பது வருந்தத்தக்கது,, உட்கட்சி பிரச்சனையை அலுவலகத்திற்குள் பேசி தீர்த்து இருக்க வேண்டும்.. நிதி அமைச்சருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் மின்சார துறை அமைச்சர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதைத் தமிழக முதல்வர் விசாரணை செய்து அமைச்சர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்

வியப்பாக உள்ளது
டாஸ்மார்க் விற்பனை அதிக அளவில் நடக்கும்போது அந்த நிதி தன்னுடைய துறைக்கு வரவில்லை என்று நிதி அமைச்சர் கூறுவது வியக்கத்தக்கதாக உள்ளது." என்றார். சமீபத்தில் நடைபெறும் குண்டுவெடிப்புகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "உளவுத்துறை முன்கூட்டியே இது தொடர்பான தகவல்களை அரசுக்குத் தர வேண்டும். இதை வைத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தீவிரவாத செயல் யார் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது

அதிமுக விவகாரம்
அதிமுக விவகாரத்தில் இரட்டை தலைமை அந்த கட்சிக்கு ஒத்து வராது என்று பலமுறை நான் கூறியுள்ளேன்.. அது வழி தான் நடந்து வருகிறது. அதிமுகவில் நடப்பது வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக வளர வேண்டும் என்று நினைத்தால் அது தவறாகத் தான் முடியும்.. ஏனென்றால் அதிமுகவிற்குப் பதில் பாஜக தமிழகத்தில் வளர வேண்டும் என்று அவர்கள் நினைத்தாலும்.. அது ஒரு எல்லை தான் எல்லையைத் தாண்டி அவர்களால் வர முடியாது.. பாஜக எந்த யுக்தியைப் பயன்படுத்தி நாளும் தமிழக மக்கள் மனதில் அவர்களால் இடம் பிடிக்க முடியாது" என்றார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி!












Click it and Unblock the Notifications