மாந்த்ரீக சக்தி அதிகரிக்க 3 வயது சிறுமி நரபலி.. புதுக்கோட்டையில் மந்திரவாதி பெண் கைது
3 வயது குழந்தை நரபலி செய்ததாக பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

புதுக்கோட்டை: "ஆமாம்.. எனக்கு மாந்திரீக சக்தி அதிகமாகணும்னு நினச்சேன்.. அதான் கழுத்தை அறுத்தேன்.. கொலை செய்தேன்" என 3 வயது சிறுமியை நரபலி செய்த மந்திரவாதி பெண் தெரிவித்துள்ளார்.
இலுப்பூர் அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி வெள்ளைச்சாமி - முருகாயி. இவர்களது மகள்தான் 3 வயது ஷாலினி. கடந்த 26-ம் தேதி சாயங்காலம் தன் வீட்டு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டாள்.
[என்ன கொடூரம்.. பாம்பு கடித்து ஐசியூவில் அட்மிட் ஆன சிறுமி.. கட்டி வைத்து சீரழித்த ஐவர்!]

ரத்த வெள்ளத்தில் சிறுமி
அதனால் பதறி போன பெற்றோர், குழந்தையை தேட ஆரம்பித்தார்கள். எல்லா இடங்களிலும் தேடி கடைசியில் வீட்டிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த காட்டுப் பகுதியில் சிறுமி கழுத்தறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தங்களது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு கதறி அழுதனர்.

சின்னப்பொண்ணு
தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து உடனடி விசாரணையில் இறங்கியதுடன், அதே பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்ற பெண் மந்திரவாதியை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அப்போதுதான் சின்னப்பொண்ணு கூறிய தகவல்களை கேட்டு போலீசார் உட்பட எல்லோருமே ஷாக் ஆகி நின்றார்கள்.

கழுத்தை அறுத்தேன்
பெண் மந்திரவாதி இதுபற்றி சொன்னதாவது: "என்னுடைய மாந்திரீக சக்தி அதிகரிக்க வேணும்-னு நினைச்சேன். அதுக்காக 3-வயது சிறுமியை நரபலி கொடுத்தால் எனக்கு பலம் வந்துடும்னு கணக்கு போட்டேன். அதனால்தான் சிறுமியை அழைத்து கொண்டு போய் கழுத்தை அறுத்து கொலையும் செய்தேன்" என்றார் கூலாக.

ஷாக்கில் மக்கள்
இதையடுத்து மந்திரவாதி பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு குழந்தையை இரக்கமின்றி துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற இந்த சம்பவமும், அதற்கு மந்திரவாதி பெண் கூறிய காரணமும் கேட்டு மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications