13 வயது சிறுமி.. தைல மரக்காட்டுக்குள் அட்டகாசம்.. பரிதாப மரணம்.. கந்தர்வக்கோட்டையில் ஷாக் சம்பவம்
தைல மரக்காட்டில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில் அவர் உயிரிழந்துள்ளார்
புதுக்கோட்டை: உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் தைல மரக்காட்டில் மயங்கி கிடந்தார் அந்த 13 வயது பெண்.. மர்மநபர்கள் தைல மரக்காட்டிற்குள் கடத்தி வந்து பெண்ணை கூட்டாக சேர்ந்து நாசம் செய்துள்ளனர்.. தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பிஞ்சை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.. பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கந்தர்வகோட்டையை அலற வைத்துள்ளது,
கந்தர்வகோட்டை அருகே உள்ளது நொடியூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு வயது 13 ஆகிறது.. 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்..

இந்த கிராமத்தை ஒட்டி பாப்பான்குளம் என்ற பகுதி உள்ளது.. நேற்று அங்குள்ள குளத்துக்கு அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சிறுமி சென்றிருக்கிறார்.. அப்போது மர்மநபர்கள் சிறுமியை தைல மரக்காட்டிற்கு தூக்கி சென்றுள்ளனர்.. இந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தைல மரக்காடு உள்ளது.
அங்குவைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. காட்டுக்குள் சிறுமி செல்வதை பார்த்து பின்தொடர்ந்து வந்துள்ளனர் போல தெரிகிறது... சிறுமி தைலமரக்காட்டில் படுகாயங்களுடன் விழுந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் சொன்னார்கள்.
அவர்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. தீவிரமான சிகிச்சை தரப்பட்டும் சிறுமி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீசார் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.. சிறுமியை நாசம் செய்தது யார், யார் என தெரியவில்லை.
அதனால் அவர்களை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.. தைல மரக்காட்டில் பெண்ணை பலாத்காரம் செய்ததும், உடம்பெல்லாம் காயமடைந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியாமல் போனதும் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications