வாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்
புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதியில் வாரயிறுதி நாட்களில் சைக்கிளில் உலா சென்று பொதுமக்களை சந்திக்கும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
நேற்றும், இன்றும் இதற்காக புதிதாக வாங்கப்பட்ட சைக்கிளை எடுத்துக்கொண்டு தனி ஆளாக கட்சியினர், பாதுகாவலர்கள் என கூட்டத்தை தவிர்த்து தனி ஆளாக விராலிமலையை வலம் வந்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால் இப்போதே வியூகங்களை வகுத்து செயல்படத் தொடங்கிவிட்டார் விஜயபாஸ்கர்.

சுறுசுறுப்பு
தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான துறையை நிர்வகிப்பவர் விஜயபாஸ்கர். சர்ச்சைகள் சங்கு சங்கரம் போல் சுழற்றி சுழற்றி அடித்தாலும் அசராமல் அனைத்தையும் எதிர்கொண்டு அரசியல் செய்து வருகிறார் இவர். குட்கா தொடங்கி சுஜித் உயிரிழப்பு வரை எத்தனையோ புகார்களும், விமர்சனங்களும் இவரை வட்டமடித்துள்ளன. ஆனால் அனைத்தையும் அசாதாரண துணிச்சலால் எதிர்கொண்டு நடைபோடுகிறார்.

விராலிமலை
திருச்சி மாவட்டத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தையும் ஒன்றாக இணைக்கும் விராலிமலை தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் 2021-ம் ஆண்டும் விராலிமலையில் தொகுதியிலேயே போட்டியிட விரும்பும் விஜயபாஸ்கர் இப்போதே தனது வெற்றிக்கான வியூகங்களை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்.

மக்கள் சந்திப்பு
பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ இன்னோவா கிரிஸ்டா காரில் கண்ணாடியை ஏற்றிவிட்டு செல்லாமல், வாரத்தில் இரண்டு நாட்கள் தொகுதி மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டு அதற்காக பிரத்யேக சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார் விஜயபாஸ்கர். காலை நேரத்தில் சைக்கிளை மிதித்துக்கொண்டு கடைவீதிகளுக்கு செல்வது, தெருக்களில் தாய்மார்களை சந்திப்பது என அதிரடி கிளப்ப உள்ளார்.

சோதனை
நேற்றும், இன்றும் விராலிமலை தொகுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிய விஜயபாஸ்கருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்ததை அடுத்து, இனி வரும் வாரங்களில் இதனை முழுமையாக பின்பற்ற உள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால், 2021 தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றி பெற்று ஒரு எம்.எல்.ஏ.வாகவாவது ஆக வேண்டும் என உறுதியுடன் உள்ளார் விஜயபாஸ்கர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications