புதுக்கோட்டையில் சரண கோஷங்களுடன் நகர்ந்த சாமி தேர் திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது- 7 பேர் படுகாயம்!
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் புகழ்பெற்ற பிரகதாம்பாள் கோவில் தேரோட்டத்தின்போது, தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர்
தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானமாகும். இந்த சமஸ்தான மன்னர்களின் குலதெய்வமாக இருப்பவர் திருக்கோகர்ணத்தின் அம்பாள் பிரகதாம்பாள். அருள்மழை பொழியும் அம்மனை வழிபட்ட பிறகே எந்த ஒரு காரியத்தையும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர் செய்து வந்தனர். அம்மனை போற்றிட சமஸ்தானம் சார்பில், அம்மனின் உருவம் பொறித்த காசினை வெளியிட்டது. "அரைப்பணம்' என்ற அளவில் அம்மன் திரு உருவம் வெளியானதால், அப்பகுதி மக்களால் "அரைக்காசு அம்மன்' என்றே அம்மன் அழைக்கப்பட்டு வருகிறார். ஆண்டுதோறும் விழா எடுத்து, பக்தர்கள் விரதமிருந்து இந்த அன்னையை புதுக்கோட்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் திருவிழா, கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாவது நாளான இன்று. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 தேர்கள் முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்தன. முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் முருகப் பெருமானும், மூன்றாவது தெருவில் பிரகதாம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தேர் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மூன்றாவது தேர் திடீரென கவிந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து தேரை வடம்பிடித்து இழுத்து வந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தேர் கவிழ்ந்ததில், தேரை வடம் பிடித்து இழுந்த 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனைக் கண்ட காயமடைந்த பக்தர்களின் உறவினர்கள் கதறி அழுததோடு, தெய்வதறியாது திகைத்தனர். இதனையடுத்து, காயம் அடைந்தவர்கள், உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலின்பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர், தேர் கவழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணை நடத்தினர். கோவில் திருவிழாவில், தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications